பக்கம் எண் :

போலிக யுருப்படிகள்49

மரபுவழக்கு: (Idiom)

     பதித்தெழுது-தல் = செ. குன்றா வி. 1. அழுத்தி யெழுதுதல்: to write forming a deep impression. 2. மேலே இடம் விட்டுக் கீழே யெழுதுதல்; to write in the lower half of a page leaving space at the top.

மூலமும் திரிவும் (origin and derivation)

பள் - படு - படி - பதி. பள் - பள்ளம்.

படுதல் = தாழ விழுதல், விழுதல், தொடுதல், பதிதல்.

படுத்தல் = பள்ளமாதல், தாழ்தல், விழுதல், படுக்கையாய்க் கிடத்தல், பதிதல், பதிவு செய்தல்.

படிதல் = தாழ்த்தல், கீழ்ப்படுதல், பணிதல், பதிதல்.

பதிதல் = ஆழ இறங்குதல், பொறித்தல், பதிவு செய்தல்.

இனச் சொல் : (cognates and allied words)

1. திரவிடம்:

     மலையாளம் - பதி, பதிவு.

     பதிக்க, to impress. பதியுக, to be impressed, be pressed down. பதி, being fixed in, pressed down. பதிவு, settlement, custom.

     பதம், softness, elasticity, yielding temper. பதம, பதும. pliancy. பதர்ம்ம, rottenness of rice through damp, softness of mind. பதுக்க, to be soft, tender, pliable. பதுப்பு, softness. பதுப்பிக்க, to soften பதம், the right degree of ripeness, temperature, etc.

     தெலுங்கு - பதனு, பதுனு, moisture, dampness, wetness; ripeness maturity temper.

     கன்னடம் - பத, proper or good state or condition, proper degree or temperature, the seasoning of any food, the right degree of a ripeness, keenness of edge or sharpness ஹத, proper condition

     துளுவம் - பதனுனி, பதணுனி, to become soft.

     குடகம் - பத soft.

     கோத்தம் - பத்ம், temper of iron

     மாலத்தம் - பெத்கெ, to be soft. பதோ, sharp.

    

குவீ - பெதெ. soft and damp.

     பிராகுவீ - புதேன், cold, cool, புதீ, coldness, frost.

2. ஆரியம் :

     பதனம் - வ. (Skt.) பதன.

     பதவி - வ. (Skt) பதவீ.