| (c) | இளப்பம் = தாழ்வு, இளக்காரம் = மென்மைபற்றி மேற்செல்லல். |
| | இளகு = மெல்லிதாகு, இளக்கம் = மென்மை. |
| | இணங்கு = மென்மையாகு, உடன்படு. |
| | இலகு = எளிது, கனமின்மை. இலேசு = எளிது, கனமின்மை. |
| | இகழ் = எளிமையா யெண்ணு. |
| 11. எள் | |
| | இள் - எள். |
| | எண்மை, எளிமை = வறிய நிலை. |
| | எளிது = இலேசானது. |
| | எள் = சிறிய கூலம்(தானியம்). எள்ளு = இகழ். |
| | எள்கு - எஃகு = இளகிய இரும்பு. |
| | ஒ.நோ : உருகியது உருக்கு. |
| | எய் = இளை, சோம்பு |
| | எ = ஏ |
| | ஏளனம் = இகழ்ச்சி. ஏழை = எளியவன், அறிவிலி. |
| | ஏசு = இகழ். |
| 12. பின் | |
| | இ - பின் |
| (a) | பின், பின்னே, பின்னை, பின்னர், பின்பு, பின் + கு = பிற்கு. |
| | பிற்காலே = பின்னுக்கு. |
| | பின்று = பின். |
| | பிந்து = பிற்படு. |
| (b) | பின் - பிற, பிறம், பிறம்பு, பிறகு, பிறக்கு, பிறக்கிடு. |
| | பிறகு, பிறக்கு = பின்பு, முதுகு. |
| | பிறக்கிடு = பின்னுக்கிடு. |
| | பிறம்பத்தங்கால் = பின்னங்கால் |
| (c) | பிற = மற்ற. பிறன் = மற்றவன், அயலான், பிறத்தியான் = அயலான். |
| 13. புற | |
| | பிற - புற - புறம் - புறன். |
| | புறம் = பின், முதுகு, வெளி, வெளிப்பக்கம், மேற்பக்கம், பக்கம். |
| | புறம் = வெளிநிலம், முல்லை நிலம், நிலம். அறப்புறம் = அறநிலம். |
| | புறம்போக்கு = எல்லாரும் செல்லும் வெளிநிலம். |
| | புறம் = புறா = புறவு = புறவம். |
| | புறா = முல்லை நிலத்திலுள்ள பறவை. |
| | புறப்படு = வீட்டைவிட்டு வெளிப்படு, பயணந் தொடங்கு. |