| புறப்பாடு = வெளிக்கிளம்பிய கொப்புளம், புறப்படுதல். |
| புறம்பு = வெளி, அயல். |
| புறணி = மேற்பட்டை, புறங்கூற்று. |
| புறங்கூறு = பின்னாற்சொல், பின்னாற் பழி |
| புறங்காடு = ஊர்க்கு வெளியுள்ள சுடுகாடு |
| புறங்காட்டு, புறங்கொடு = முதுகு காட்டு, தோற்றோடு. |
| புறம் = புறப்பொருள், புறம். |
| புறன் = புறங்கூற்று. |
14. இடு. | |
| இள் - இடு. |
| இடுகு = சிறுத்துப்போ. |
| இடுக்கு = நெருக்கு, நெருக்கமான இடம் |
| இடுக்கு = நெருக்கு, நெருக்கமான இடம் |
| இடுக்கம் = நெருக்கம். |
| இடுப்பு, இடை = சிறுத்த அரை. |
| இட்டிது = சிறியது. |
| இட்டிகை = இடுக்கமான வழி. |
| இண்டு = சிறிய துவாரம். |
| இடுகு - இறுகு. |
| இறுக்கம் = நெருக்கம், திணிவு, உறுதி. |
15. ஆள் | |
(a) | ஆள் = ஆட்சி செய், பயன்படுத்து, வழங்கு. |
| ஆள் + சி = ஆட்சி. |
| ஆள் = பிறவற்றை யாளும் மனிதப் பிறவி. |
(b) | ஆள் - ஆண் = ஆட்சியிற் சிறந்தவன். |
| ஆண்மை = ஆண்டன்மை, வீரம். |
| ஆண் - ஆடு - ஆடூஉ, ஆடவன். |
| ஆள் - ஆணை, ஆண் - ஆணவம் = ஆண்டன்மை, வீரம், அகங்காரம். |
16. இற | |
| இற = வளை |
| இறவு, இறப்பு, இறவாணம், இறை = வளைந்த தாழ்வாரம். |
| இறா, இறால், இறாட்டு = பெருங்கூனி. |
| ஒ.நோ: கூன் - கூனி. |
| இறால் = வட்டமான தேன் கூடு. |
| இறாட்டி = வட்டமான எரு. |