| | இறை = வளைந்த முன்கை. |
| | இறைஞ்சு = வளை, வணங்கு. |
| 17. இறு | |
| | இற - இறு. |
| | பயிர், மனித வுடம்பு, சூரியன் என்பவை வளைந்தபின் இறத்தலை அல்லது மறைதலை நோக்குக. |
| | இற = சா. |
| | இறு = முடி. இறுதி = முடிவு. ஈறு = விகுதி. |
| | இறு = பயணத்தை முடி, தங்கு. |
| | இறை, இறைவன் = எங்கும் தங்கியிருப்பவன், கடவுள், அரசன். |
| | இறு = கடனைத் தீர், செலுத்து. |
| | இறை = வரி. |
| | இறு = ஒருவன் சொன்னபின் பதில் கூறு. |
| | இறை = விடை. |
| 18. இர். | |
| | இர் - கருமைக் குறிப்பு. |
| | இரா, இராத்திரி, இரவு = கரிய இருட்டு வேளை. |
| | இறடி = கருந்தினை. |
| | இருமை = கருமை. |
| | இரும்பு = கரிய உலோகம். |
| | இருந்தை = கரி. |
| | இருள் = ஒளியின்மை. |
| | இ - அ. அறல் = கருமணல். |
| | இ - எ. எருமை = கரிய மாட்டு வகை. |
| | எருது = கருங்காளை, காளை. |
| | எ - ஏ. ஏனம் = பன்றி |
| | (ஏனை) - யானை = கரிய விலங்கு. |
| | ஏனல் = கருந்தினை, ஏனம் = கரும்பாத்திரம். |
| 19. ஊ. | |
| | ஊ = முற்செலற் குறிப்பு. |
| | ஊங்கு = முன்பு. |
| | ஊங்கு = முன்பு. |
| | ஊக்கு = முற்செலுத்து, உற்சாகப்படுத்து. |
| 20. முள். | |
| | ஊ - உ - முள் |
| | முள் = முன்சென்று பதி, நகத்தைப் பதி, பதியும் கூரான உறுப்பு. |
| | முளவு = முள்ளம் பன்றி. |