சென்னை யகரமுதலியில் bhar என்னும் சமற்கிருதச் சொல்லொடு ஒப்புநோக்குமாறு ஏவி, அத்திரிபையே மூலம்போற் குறிப்பாகக் குறித்தி ருப்பது தவறாகும். ஆரியர் தமிழரின் ஏமாறிய தன்மையைப் பயன் படுத்தி, வடமொழியை மூலமாகவும் தென்மொழியை அதன் திரிபாகவும் கொண்டுள்ள கொள்கையின் விளைவு இது. ஆயிரக்கணக்கான வடசொற்கள் தென்சொற்களின் பகுதியென் பதையும் வடமொழியில் ஐந்திலிரு பங்கு தமிழ் என்பதையும் செ.சொ.பி. அகரமுதலி தெள்ளத் தெளிவாகக் காட்டும். |
செ.சொ.பி.அ. போலிகை யுருப்படிகள் அவ் வகரமுதலித் திட்ட வுறுப்பினர் அவ் வகரமுதலி யமைப்பை ஓரளவு அறிந்து கொள்ளு மாறே 'தென்மொழி'யிற் காட்டப்படுகின்றன. உண்மையான அகரமுதலி எல்லாவகையிலும் மிக விரிவாகவும் விளக்கமாகவும் வரும் என்பதை அறிதல் வேண்டும். ஆகவே, புலவர். அடல் எழிலனார் விடுத்த எச்ச ரிக்கை மடலை உண்மையில் உட்கொள்ளாவிடினும், நடைமுறையில் உட்கொண்டதாகவே முடியும் என்பதை இறுதியில் அனைவரும் அறிவர். இஃது, அவர் குறித்த "அரைவேக்காட் டாராய்ச்சியாளரும்" "பச்சை வெட்டாராய்ச்சியாளரும்" மேலதிகாரிகளையும் நாட்டுமக்களை யும் ஆரியரைப் போன்றே ஏமாற்றிவரும் பயனில் முயற்சியை, உடனே விட்டொழியுமாறு யான் விடுக்கும் எச்சரிக்கைக் குறிப்பாகும். |