7 உ.த.க. உறுப்பினர்க்கு அறிவிப்பு | பாவலர் பெருஞ்சித்திரனார் உ.த.க. பொதுச் செயலாளர் பதவியை விட்டு விலகி விட்டதனாலும், உ.த.க.வின் நோக்கம் நிறைவேறாவிடின் அது கலைக்கப் பட்டுவிடும் என்று ஒரு கூற்றை மதுரை மாநாட்டில் அவர் விட்டெறிந்த தனாலும், அதையடுத்துச் செ.சொ.பி. அகரமுதலித் தொகுப்புத் திட்டத்தை அவர் உருவாக்கி யுள்ளமையாலும், நிலையான பொதுச் செயலாளர் ஒருவர் அவருக்குப்பின் இன்னும் அமர்த்தப்படா மையாலும், திருத்தப்பெற்ற சேர்ப்புப் படிவத்தை அச்சிடப் பொருளா ளரிடம் போதிய பணமின்மையாலும், பல்குழுவும் பாழ்செய்யும் உட் பகையும் தன்னலக் குறும்பும் ஆங்காங்கு கலாம் விளைத்து வருவத னாலும், உ.த.க. உண்டா இல்லையா என்னும் ஐயம் பல இளந்த உள்ளங்களில் எழுந்துள்ளது. | உ.த.க. என்பது உலகந் தழுவிய கழகமாதலால், தமிழகத்திலும் கன்னட நாட்டிலும் மட்டும் இதுவரையிருந்ததுபோல் இராது, இனிமேல் தான் வெளி நாடுகளிலும் பரவி உண்மையான உலகத் தமிழ்க் கழகமாக இயங்கவிருக்கின்றது என்பதை, உண்மைத் தமிழன்பர் அனைவரும் அறிந்து மகிழ்வாராக. | உண்மையான தமிழ்ப் பற்றின்றி கட்சிப் பற்றும் ஆட்பற்றும் தன்னலப் பற்றுங்கொண்டவர் உறுப்பினரும் மாவட்ட அமைப்பாளரு மாக அமைந்ததனாலேயே, உ.த.க. இன்று கட்டுக் குலைந்துள்ளது. தமிழின் பெயராற் கட்சியை வளர்க்க வேண்டுமென்பதே பலர் விருப்பம். தமக்கு வேண்டியவர் பொறுப்பான பதவியில் இல்லாவிடின், தாம் விலகிக் கொள்ள வேண்டுமென்பது ஒரு சாரார் கருத்து. உ.த.க. கிளை யொன்றமைத்து அதன் வாயிலாகத் தமக்குப் பொருளீட்டிக் கொள்வதே சிலர் குறிக்கோள். 'பாவாணர் மன்றம்' என ஒன்று கன்னட நாட்டில் தோன்றி என் நூல் வெளியீட்டிற் கென்று ஈராயிரம் உருபா தொகுத்த பின் அதன் தலைவரும் செயலாளரும் பொருளாளரும் கூடித் தமக் குள் அத்தொகையைப் பிரித்துக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. சில கிளைகள் உ.த.க. தலைமை யகத்திற்கென்று ஏதேனு மொருவகை யிற் பொருள் தொகுத்துத் தமக்கே வைத்துக்கொள்கின்றன. சில அமைப் பாளருக்கு ஆண்டிற்கு ஐம்பது உருபாவிற்கு மேல் தண்டும் ஆற்றலே இல்லை. சிலர்க்குக் கிளையமைக்குந் திறனுமில்லை. சிலர்க்குக் குடும்பம் பெருத்துப் பொருளாசை மேலிட்டபின் தமிழ்ப் பற்றுத் தானே நீங்கி விடுகின்றது. சிலர்க்குத் தாம் பதவியில் இல்லாவிடின், தம் | | |
|
|