| ஆரியர் சிறுபான்மையராய் இருந்தமையான், இந்தியாவிற் குடியேறிய உடனேயே மாபெரும்பான்மையரான பழம் திரவிட மக்களுடன் கலந்து நாளடைவில் தம் முன்னோர் மொழியை மறந்துவிட்டனர். அதனால் அவர் எந்த மாநிலத்தில் குடியேறி வாழ்கின்றனரோ அந்த மாநில மொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆயினும், தம் தாய்மொழியிற் சற்றும் பற்றின்றி தம் முன்னோர் மொழியின் கலவைத் திரிபாகிய வேதமொழியையும், அதற்குப் பிற்பட்ட அரைச் சேர்க்கை யான இலக்கிய நடை வழக்காகிய சமற்கிருதத்தையுமே இன்றும் கண்ணும் கருத்துமாகப் பேணிவருகின்றனர். தம் தாய்மொழிகளான திரவிட மொழிகளை, இழிந்தோர் மொழியெனப் பழிக்கவுஞ் செய்கின்றனர். |
| தமிழ்த் தெய்வமென்று சிலரால் போற்றப்பெறும் காலஞ்சென்ற தென்கலைச் செல்வர், பெரும் பேராசிரியர், பண்டாரகர். உ. வே. சாமிநாதர் அவர்களும் தம் வாழ்நாள் முழுதும் தமிழைக் கற்று மாபெரும் புலவராகித் தமிழ்ப் பேராசிரியராய்ப் பணியாற்றி, பல அரும்பெருந் தொன்னூல்களை வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றியும், தமிழ்ப் பற்றுக் கொள்ளாதது மிக மிக வருந்தத் தக்கதாம். தவத்திரு. அழகரடிகளின் மாமனாரும் சென்னைவாணருமாகிய காலஞ்சென்ற திருவாளர் தணிகை மணியார் (எம். ஏ.) ஒருமுறை பர். சாமிநாதர் அவர்களிடம் சென்று, "ஐயா! நேற்றுத் தாங்கள் ஆற்றிய சொற்பொழிவு மிக நன்றாயிருந்தது". என்று சொல்ல, அப் பண்டாரகர் உடனே சீறி விழுந்து, "என்ன ஐயா, நீங்கள் கூடச் சுயமரியாதைக்கார ராகிவிட்டீர்கள்! உபந்நியாசம் என்றல் லவா சொல்ல வேண்டும்! சொற்பொழிவு என்கிறீர்களே! இப் புதுச் சொல்லை எங்கே கற்றுக்கொண்டீர்கள்?" எனக் கழறினராம். மற்றொரு முறை பண்டாரகரின் பழைய மாணவரும், குடந்தைப் பொன் வணிகரு மான திரு. ப. தி. சொ. குமாரசாமி அவர்கள் சென்னை வந்து பண் டாரகரைக் கண்டு "ஐயா நலமாயிருக்கிறீர்களா?" என்று அன்புடனும், ஆர்வத்துடனும் வினவ பண்டாரகர் கடும் புலிபோல் பாய்ந்து, "என்ன உங்களுக்குச் சமஸ்கிருதத்தின் மேல் இவ்வளவு |