13 கோலாலம்பூரில் கொண்டான்மார் கூத்து | வருகின்ற மேழ மாதம் 1ஆம் பக்கல் (14-4-1966) முதல் 2ஆம் பக்கல் (15-4-1966) வரை, பொதியத்தின் பெயராற் பெயர் பெற்றதும், குமரி நாட்டுப் பாண்டியர் சாலியொடு (சாவகத் தீவோடு) கைப்பற்றி ஆட்சி செலுத்தியதும், இன்றும் தமிழர் பலர் தம் தமிழ்ப் பண்பாடு கெடாது தழைத்து வாழ்வதுமான மலையா நாட்டுத் தலைநகரான கோலா லம்பூரில் 'உலகத் தமிழ்ப் பேரவை'ச் சார்பில் பெரும் பொருட் செலவில் நடைபெறவிருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு, இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் படிநிகராளியராக (Representatives)ச் செல்லவி ருக்கும் ஐம்பதின்மருள்ளிட்டு உலகத்தின் பல்வேறு பாகங்களினின்றும் செல்லும் விடைமுகவர் (Delegate) இரு நூற்றுவருள், தமிழின் இயல்பை யும் வரலாற்றையும் வளத்தையும் சிறப்பையும் நன்கறிந்தவரும் மொழி யாராய்ச்சியில் முற்றத் துறைபோயவருமான தவத்திரு மறைமலை யடிகள் வழியினர் ஒருவரேனும் அமையாதிருப்பது, தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழறிஞர்க்கும் இழிவு தரத்தக்க நிகழ்ச்சியாகவே தோன்றுகின்றது. | இம் மாநாட்டுத் திருக்கூத்தை ஆட்டிவைப்பவர். இன்று மலையாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராய் அமர்ந்திருக்கும் திரு. தனிநாயகம் என்பார். இவர் அண்ணாமலை நகரில் பேரா. தெ. பொ. மீ. அவர்களின் அறுபான் விழாப் பாராட்டாளருள் ஒருவராக வந்து, தம் பணியைச் செவ்வனே ஆற்றியவர். இதினின்று, இருவழித் தமிழறிஞருள் இவர் எவ்வழியினர் என்பதை உணர்ந்து கொள்ளலாம். கிறித்தவ சமயக் குரவர் பணிக்கென்று சிறப்புடன் பயிற்சியும் பட்டமும் பெற்ற இவர். அப்பணியில் ஈடுபடாது எவரும் புகத்தக்க திறந்த மட மாகிய தமிழ்த்துறையிற் புகுந்து தனிநாயகம் பெற விரும்பியது ஒரு தனிச்சிறப்பே. | அமெரிக்க நாடு சென்று தம் ஆங்கிலப் பேச்சுவன்மையால் அந்நாட்டு மக்களை இணக்கி, தமிழ் வளர்ச்சிக்கென்று பெருந்தொகை தொகுத்து வந்ததாகவும், அதைக் கொண்டு முதற்கண் தூத்துக்குடியில் தமித்து நடத்தி வந்த தமிழ்ப் பண்பாடு என்று பொருள்படும் தலைப்புக் கொண்ட ஆங்கில இதழிகை (Tamil Culture) வெற்றி பெறாமையால், சென்னை சென்று சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பல பெரும் கல்லூரிகளிலும் தலைமைத் தமிழ்ப் பதவி தாங்கும் பேராசிரியன்மாரைக் கொண்ட ஒரு குழுவை அவ் விதழிகை யாசிரியர் குழுவாக அமைத்து, அதில் தம்மைத் தலைமைப் | | |
|
|