பக்கம் எண் :

87

15
பல்குழுவும் உட்பகையும் கொல் குறும்பும்

    

"பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல் குறும்பு மில்லது நாடு."                   (குறள். 735)

     ஒரு நல்ல நாட்டிற்கு இருக்கவேண்டிய நிலைமைகளையும் இல்லா திருக்க வேண்டிய நிலைமைகளையும், நாடு என்னும் அதிகாரத்தில் எடுத்துக் கூறியுள்ளார் எல்லா நாட்டு மக்களும் இன்புற்று வாழ்தற்கு வழிவகுத்த திருவள்ளுவர். இல்லாதிருக்க வேண்டிய நிலைமைகளுள் மூன்று, பல்குழு, உட்பகை, கொல் குறும்பு என்பன. இவ் விலக்கு ஆட்சித்துறைக்குப் போன்றே மொழித்துறைக்கும் ஏற்கும்.

பல்குழு :

     ஒரு நாட்டுமக்கள் முன்னேறுவதற்கு வழி மொழியே. அது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப ஒன்றும் பலவுமாயிருக்கலாம். கூட்டு நாடல்லாத தனி நாடுகளிலும் கூட்டுநாடுகளின் கூற்றுநாடுகளிலும், பொது மக்களும் புலமக்களும் ஒருங்கே முன்னேறுவதற்கு ஒரேவழி தாய்மொழி யென்னும் நாட்டு மொழியே. தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ் என்பதை நாட்டின் பெயரே காட்டும். ஆகவே, தமிழுயரத் தமிழன் உயர்வான் என்பதும், தமிழ் தாழத் தமிழன் தாழ்வான் என்பதும் சொல்லாமலே பெறப்படும். சிலர் தமிழன் உயர்ந்தால்தான் தமிழ் உயரும் என்று தலைகீழாக மாற்றிக்கூறுவர். அக் கூற்றை, வையாபுரிகளைக் காட்டுங் கண்ணாடியாகக் கொள்க. ஏனெனின், தமிழை உயர்த்தாது அதை என்றும் ஆரியர்க்குக் காட்டிக்கொடுத்து, தந்நலத்தால் தம்மை உயர்த்திக் கொள் வதே வையாபுரிகள் இயல்பு. தமிழ் என்னும் சொல்லினின்று தமிழன் என்னும் பெயர் தோன்றியிருப்பதே, தமிழாலேயே தமிழன் என்னும் இனம் தோன்றிற்று என்பதைக் காட்டும்.

     தமிழ் வரலாற்றை அடிநாளிலிருந்து நோக்கின், ஆரியச் சூழ்ச்சியால் பல்வேறுவகையில் தமிழ் கெடக்கெடத் தமிழனும் உடன் கெட்டு வந்திருப்பதைக் காணலாம். இந் நூற்றாண்டில் மாபெரும் புலவரான மறைமலையடிகளின் அரும்பெரு முயற்சியால் தமிழ் வடசொற் களையப்பெற்று மீண்டுந் தனிமொழி யாக்கப்பட்டபின், தமிழன் சற்று உயர்ந்திருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதினின்று தமிழ் வாழ்வே தமிழன் வாழ்வு என்பதைத் தெற்றெனத் தெரிந்துகொள்க.

     தமிழை வளர்த்தற்குத் தமிழகம் முழுதுந் தழுவிய பாண்டியன் தமிழ்க் கழகம் ஒன்றே பண்டைக் காலத்தில் இருந்து வந்தது. இக் காலத்திலோ, மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்றும், திருநெல்வேலித்