உண்மைத் தமிழர் அனைவர்க்கும் உறைத்த எச்சரிக்கை | 93 |
ஏனையிந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட விருப்பதால் தமிழ் கெடாவாறும் பொதுமக்கள் பணம் வீணாகாவாறும் இதை உடனே தடைசெய்ய வேண்டு மென்றும்; மொழியாராய்ச்சி, நடுநிலை, அஞ்சாமை, தன்னலமின்மை முதலிய பண்புகள் கொண்ட தமிழ்ப் புலவர் ஒருவர் எழுதும் உண்மையான தமிழிலக்கிய வரலாற்றையே, உலகெங்கும் பரப்ப வேண்டுமென்றும்; உ. த. க. கிளைகளும் மறைமலையடிகள் மன்றங்களும் திரு.வி.க. மன்றங்களும் தமிழ்க் கழகங்களும் தனிப்பட்ட தமிழ்ப் பற்றாளரும், தமிழக அரசு முதல்வர்க்கும் சாகித்திய அக்கா தெமிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றி யனுப்புவதுடன், எனக்குந் தெரிவிப்பின் நன்றாம். | தமிழ் - ஆரியப் போராட்ட அரங்கு தமிழக மேடையினின்று உலக மேடைக்கு மாறவிருக்கின்றது. இந்நிலையில் தமிழுக்கு மாறான எல்லா நூல்களும் தக்கவாறு கண்ணோட்டமின்றிக் கண்டனஞ் செய்யப் படுமென்பதை, வையாபுரிகளும் அவர் வழியினரும் அறிவாராக. | | |
|
|