'பெப்பிரவரி' 4ஆம் நாள் கன்னடநாட்டு முதலமைச்சர், அங் குள்ள தமிழர்க்குக் கன்னடர்க்குப்போன்றே முழுப்பாதுகாப்பும் அளிக் கப்படுமென்றும், முன்போல் தீங்கு இனி ஒருபோதும் நேராதென்றும் உறுதியளித்தார். ஆயின், அது சொல்லளவிலன்றிச் செயலளவிலில்லை. முன்பு வெளிப்படையாக நிகழ்ந்த அட்டூழியங்களெல்லாம், இன்றும் துணையற்ற நிலையிலும் இராக் காலத்தும் மறைமுகமாக நடந்துகொண்டு தான் இருக்கின்றன. | தொலைபேசி நிலைய ஊழியர் இரவில் வேலைக்குச் சென்றாலும், வேலைமுடிந்து வீடு திரும்பினாலும் தனித்த நிலையிற் கத்திக்குத்து; இராக் காலத்தில் வீட்டிற்குள் படுத்திருந்தால் வெளியே தீவைப்பு. வெளியே படுத்திருந்தால் கத்திக்குத்து, தனிப்பட்ட கடைகளில் இரவும் பகலும் கொள்ளையடிப்பு. திரு. பழனி என்பவர் முதலமைச்சர் காப்புறுதி கூறிப் பன்னாட்குப் பின்னரே மண்டையில் வெட்டப்பட்டார். அடியுண்ட பேர், பற்பலர். அவருள் தன்மானமுள்ளவர் தாம் பட்டதை வெளிப்படுத்தவில்லை. | கன்னடநாட்டு முதலமைச்சர் வருகின்ற பொதுத்தேர்தல் விளைவு நோக்கிக் கயவரையுங் குண்டரையும் கட்டுப்படுத்த வியலாத நிலைமையி லிருப்பதாகத் தோன்றுகின்றது. | கன்னடக் கிளர்ச்சியாளர் என்றும், கன்னட சேனை என்றும், கன்னட நாட்டு எல்லைப்புறக் கிளர்ச்சிக் கூட்டம் என்றும், பல்வேறு கன்னட இனமொழி நாட்டுவெறியாளர் அமைப்புக்கள் இருக்கின்றன. அதனால், இதுவரை கன்னடர் எவருக்கும் எட்டுணைச் சேதமும் விளைந்ததில்லை. ஆயின், தமிழரோ பல்வகையில் அல்லற்பட்டதுடன், இரவும் பகலும் அமைதியின்றி அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவருள் பெரும்பாலார் தி. மு. க. கட்சியினராயிருந்தும், அதுநோக்கி யேனும் இற்றைத் தமிழ்நாட்டரசு அவர்க்குப் பாதுகாப்பளிக்க முன்வர வில்லை. மதுரையிலுள்ள தமிழர் படையும் அவர் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டது. அண்மையில் வெங்காலூர்த் தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்பிற்குச் சென்ற ஒரு பெருந்தமிழ்ப் பேராசிரியரும் இச் செய்திபற்றி ஒன்றும் சொல்லவில்லை. திரு. வாத்தல் நாகராசு தமிழர் சேனையைக் கலைக்குமாறு எச்சரிக்கின்றார். கன்னட சேனை தமிழரை அடங்கி நடக்குமாறு அச்சுறுத்துகின்றது. ஈழத்திலும் கடாரத்திலும் மலையாவிலும் தமிழன் வெளியேற்றப்பட்டதற்குமேல் வெங்காலூரினின் றும் வெளியேற வேண்டுமா? மானங்கெட்ட மழுங்கல் தமிழா! இனியா கிலும் விழித்தெழுந்து இனத்தைக் கா. | | "வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து வாளாண்மை யாலும் வலியராய்த் - தாளாண்மை தாழ்க்கு மடிகோ ளிலராய் வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று" | | | | - பழமொழி 151 | | |
|
|