II. இரட்டைச் சில்லி |
முதலாம் வகை |
ஆட்டின் பெயர் : இரட்டைக் கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி இரட்டைச் சில்லியாம். |
ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர். |
ஆடுகருவி : வரிசைக்கு நான்காக இருவரிசைக்கு எட்டுச் சதுரக் கட்டங்களும் அவற்றோடு மலையுங்கொண்ட, ஓர் அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும்; இதை ஆடுகருவியாம். |
ஆடுமுறை : இது பெரும்பாலும் பாண்டிநாட்டு முறைப்படி ஆடப்பெறும். |
இரண்டாம் வகை |
ஆடுமுறை : இது ஏறத்தாழ ஒற்றைச் சில்லி போன்றே ஆடப்பெறும். ஒற்றைச் சில்லியில், ஒவ்வொரு கட்டத்திலும் சில்லியெறிந்தபின், கரகம் அல்லது மேற்புற வெளிவரை நொண்டியடித்துச் சென்று மீளவேண்டும். இதிலோ, வலப்புறக் கட்டங்களின் வழியாகச் சென்று இடப்புறக் கட்டங்களிலுள்ள சில்லியை மிதித்துத் தள்ள வேண்டும். வலப்புற உச்சிக் கட்டத்தில் காலூன்றிக் கொள்ளலாம். இதைக் குறித்தற்கு அதில் மூலைக் குறுக்குக் கோடுகள் கீறப்பட்டிருக்கும். |
நடந்து செல்லவேண்டிய பகுதிகளில், ஒரே சமயத்தில் இரு காலையும் இருபுறக் கட்டத்திலும் வைத்துக் கொள்ளவேண்டும். |