மூன்றாம் வகை |
ஆட்டின் பெயர் : இது சரிகைப் பாண்டி எனப்படும். |
ஆடுமுறை : இதுவும் ஒற்றைச் சில்லி போன்றதே. ஆயின் இருவரிசைக் கட்டங் களிலும் ஆடப்பெறும். இடவரிசையில் சில்லி யெறியும்போது வலவரிசை வழியாகவும், வலவரிசையிற் சில்லி யெறியும்போது இட வரிசை வழியாகவும் செல்லவேண்டும். இட வரிசை யுச்சிக்கட்டத்தில் காலூன்றிக் கொள்ள லாம். |
நடந்து செல்லவேண்டிய பகுதிகள் மேற்கூறிய இரண்டாம் வகையைப்போல் ஆடப்பெறும். |
III. வானூர்திச் சில்லி |
ஆட்டின் பெயர் : வானூர்திபோல் அரங்கு கீறி ஆடப்படும் சில்லி வானூர்திச் சில்லியாம். இதை ஏரோப்பிளேன் (Aeroplane) சில்லி என ஆங்கிலச் சொற்கொண்டே அழைப்பர். |
மேனாட்டு வானூர்தி தமிழ்நாட்டிற்கு வருமுன்னரே இந்த ஆட்டு ஆடப்பட்டிருப்பின், அன்று இதற்கு வேறொரு தமிழ்ப் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். |
ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர். |
ஆடுகருவி : மேலே காட்டப்பட்டபடி ஓர் அரங்கும், ஆளுக்கொரு சில்லியும், இதை ஆடுகருவியாகும். |
ஆடுமுறை : முதலாவது, முதற் கட்டத்தில் சில்லியெறிந்து நொண்டியடித்து அக் கட்டத்தைத் தாண்டி, மேற்கட்டங்களுள் ஒற்றைக் கட்டங்களிலெல்லாம் ஒவ்வோர் எட்டுவைத்து நொண்டி யடித்தும், இரட்டைக் கட்டங்களில் கட்டத்திற்கொன்றாக ஒரே சமயத்தில் இருகாலும் ஊன்றியும், மேலிரட்டைக் கட்டம் வரை |