பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்53

3. அணிற்பிள்ளை

     ஆட்டின் பெயர் : ஒருவன், ஒரு பெருஞ் சதுரத்தின் நடுவிலுள்ள குறுக்கை (சிலுவை) போன்ற கோட்டின்மேல் நின்றுகொண்டு, அணில்போல் முன்னும் பின்னும் இயங்கியாடும் ஆட்டு அணிற்பிள்ளை எனப்படும்.
     ஆடுவார் தொகை : இதை ஐவர் ஆடுவர்.
     ஆடுகருவி : நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரமும் நாற்கல்லும் இதை ஆடுகருவிகளாம்.
     ஆடிடம் : பொட்டலும், அகன்ற தெருவும் இதை ஆடுமிடமாம்.
     ஆடுமுறை : நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரத்தின் ஒவ்வொரு சதுரத்திலும் ஒவ்வொருவனாக, நால்வர் நின்றுகொள்வர். பெருஞ் சதுரத்தின் நடுவில் நாற்கல் வைக்கப் படும். ஒருவன் நடுவிலுள்ள குறுக்கை போன்ற கோட்டில்