பக்கம் எண் :

54தமிழ்நாட்டு விளையாட்டுகள்

குறுக்கும் மறுக்கும் முன்னும் பின்னுமாக முன்னோக்கியே இயங்கிக் கொண்டு, அந் நால்வரும் அக் கற்களை யெடாதவாறு தடுப்பன். அவர் அவனால் தொடப்படாமல் ஆளுக்கொரு கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவனே நாற்கல்லையும் எடுத்து ஆளுக்கொன்றாகக் கையிற் கொடுக்கவுஞ் செய்யலாம். ஒவ்வொருவனும் ஒவ்வொன்றாக எடுக்கும்போதேனும், ஒருவனே நான்கையும் எடுத்துக் கொடுக்கும்போதேனும், அணிற்பிள்ளை தொட முயல்வான் : தொட்டுவிடின், தொடப்பட்டவன் அணிற்பிள்ளை யாதல் வேண்டும். இங்ஙனமே தொடரும்.