பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்55

4. சடுகுடு

     ஆட்டின் பெயர் : ஆடுவாருள் ஒவ்வொருவனும் எதிர்க் கட்சியின் எல்லைக்குட் சென்று, சடுகுடு என்று சொல்லியாடும் ஆட்டு, சடுகுடு எனப்பட்டது. இது, பாண்டிநாட்டில் குடட்டி என்றும், வடசோழ நாட்டில் பலிச்சப்பிளான் அல்லது பலீன் சடுகுடு என்றும் பெயர் பெறும். சடுகுடு என்பது தென்சோழ நாட்டிலும் கொங்குநாட்டிலும் இதற்கு வழங்கும் பெயராம்.
     ஆடுவார் தொகை : நால்வர்க்குக் குறையாத இரட்டைப் படையான தொகையினர், இதை ஆடலாம்.
     ஆடிடம் : வெளிநிலத்திலும், பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இது ஆடப்பெறும்.
     ஆடுமுறை : ஆடுவாரெல்லாரும், உத்திகட்டிச் சமத்தொகை யான இரு கட்சியாகப் பிரிந்துகொள்வர். இரு கட்சியார் இடத்திற்கும் இடையில் ஒரு குறுக்குக் கோடு கீறப்பெறும்.
     முதலாவது, எந்தக் கட்சியார் பாடிவருவது என்று ஏதாவதொரு வகையில் தீர்மானிக்கப்பெறும். அங்ஙனம் தீர்மானிக்கப்பெற்ற கட்சியாருள் ஒருவன் குறுக்குக்கோட்டைத் தாண்டி எதிர்க்கட்சி யெல்லைக்குட் புகுந்து, 'சடுகுடு சடுகுடு'