| 68 | தமிழ்நாட்டு விளையாட்டுகள் |  
 
                                       |      மீண்டும் எல்லாவற்றையும்           முன்போற் புறங்கையில் தாங்கி, எதிரி சுட்டியதைப் பிடித்துக்காட்டித் தனியாக வைத்துவிட்டு,           எஞ்சியவற்றுள் ஒன்றை மேலெறிந்து ஐந்தைக் கீழ்வைத்துப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து           கீழுள்ளவற்றை வாரிப் பிடித்தல்வேண்டும்; பிடித்துவிடின் பழம். |                            |            ஏழாங்கல் (மற்றொரு வகை)  |                            |      ஒரு கல்லை வைத்துக்கொண்டு           எஞ்சிய ஆறு கல்லையும் உருட்டி ஒன்றாங்கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை ஆடல் வேண்டும்.           ஒன்றாங்கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாங்கொட்டையில் இவ்விரண்டாகவும்,           மூன்றாங்கொட் டையில் மும்மூன்றாகவும், நாலாங்கொட்டையில் நாலும் இரண்டுமாகவும்,           ஐந்தாங்கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாங்கொட்டையில் ஆறும் ஒரேயடியாகவும்,           ஏழாங்கொட் டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும், கீழிருக்குங் கற்கள் எடுக்கப்படும். |                            |      கீழிருந்தெடுக்குங்           கற்களை ஒரே கைக்குள் அடக்க இயலாதார், இருகையையும் பயன்படுத்திக் கொள்வதுமுண்டு.           ஆயின், இது அத்துணைச் சிறப்பினதன்று; அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமன்று : |                            |      கீழிருக்குங் கற்கள்           தூரத்தூர இருந்தால், கைக்கல்லைப் பக்கத்தில் வைத்துவிட்டுத் தொலைவிலுள்ள கல்லை           எடுத்துக் கொள்ளலாம். |                                 ஏழுகொட்டைக்கும்           பின்வருமாறு பாட்டுப் பாடப்படும்:      (1) "பொறுக்கி சிறுக்கி போ(கி)றாளாம் தண்ணீர்க்குத் தண்ணீர்க்            குடமெடுத்து."      (2) (அல்லது, வேறு ஏதேனுமொன்று.) "இரண்டு இரும்பு, ஏழடிக்           கரும்பு."      (3) "மூன்று முக்கோடு, முருகன் செங்கோடு".      (4) "நான்கு நடலம், தேங்காய்ப் புடலம்." |                          |             |   
 
				 | 
				 
			 
			 |