பாட்டுப்பாடி நெடுகலும் உறழ்ந்துரைப்பர். பாட்டு முடிந்தவுடன் திருப்பப்படும். |
பாண்டிநாட்டுப் பாட்டு |
(1) த : பாக்குவெட்டியைக் காணோமே. வ : தேடி ஓடிப் பிடித்துக்கொள். (2) த : வெற்றிலைப் பெட்டியைக் காணோமே. வ : தேடி ஓடிப் பிடித்துக்கொள். (3) த : ஆடுகிடக்கிற கிடையைப் பார். வ : ஆட்டுப் பிழுக்கையைத் தூர்த்துப் பார். (4) த : குட்டி கிடக்கிற கிடையைப் பார். வ : குட்டிப் பிழுக்கையைத் தூர்த்துப் பார். (5) த : பல்லே வலிக்குதே வ : நெல்லைக் கொறித்துக்கொள். |
கொங்குநாட்டுப் பாட்டு |
(1) த : பருப்புச் சட்டி. வ : திருப்பி நக்கு.1 (2) த : வாழை யிலை. வ : வழித்து நக்கு.2 (3) த : ஊசியாலே குத்துவேன். வ : வீட்டுமேலே ஏறுவேன். (4) த : கிணற்றிலே குதிப்பேன். வ : கல்லெடுத்துப் போடுவேன். (5) த : தலையே நோகுதே. வ : தலையணை போட்டுக்கொள். |
ஆட்டுத் தோற்றம் : இந்த ஆட்டு, நரி ஆட்டுக்குட்டி களையோ, பருந்து கோழிக் குஞ்சுகளையோ, பிடிப்பதினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. |
1,2. 'நக்கு' என்னுஞ் சொற்குப் பதிலாக 'நொக்கு' என்று வைத்துக் கொள்ளலாம். நொக்குதல் = உண்டு குறையச் செய்தல், மிகுதியாக வுண்ணுதல். |