தமிழ்நாட்டு விளையாட்டுகள் | 81 |
3. பன்னீர்க்குளத்தில் முழுகுதல் | பதினொரு பெண்பிள்ளைகள் கூடித் தெருவில் ஓரிடத்தில் வட்டமாய் உட்கார்ந்தபின், அவருள் தலைமையானவள் ஒவ்வொருத்தியின் முட்டிக்கால்களையும் ஒவ்வொன்றாக வரிசைப்படி சுற்றிச் சுற்றித் தொட்டுக்கொண்டு. | 1 | 2 | 3 | 4 | ஒருப்புட்டம் | திருப்புட்டம் | ஓடிவா | மங்களம் | 5 | 6 | 7 | 8 | செக்கைத் | திருப்பிச் | செவ்வெண்ணெய் | வார்த்து | 9 | 10 | 11 | 12 | மாடுங் | கன்றும் | வருகிற | வேளை | 13 | 14 | 15 | 16 | மஞ்சள் | தண்ணீர் | தெளிக்கிற | வேளை | 17 | 18 | 19 | காலை | மடக்கடி | காமாட்சி | | என்னும் மரபுத் தொடரை, தொடுகைக்கொன்றாகப் பத்தொன்பது சீர்படச் சொல்வாள். காமாட்சி என்று முடிகிற பெண் உடனே ஒரு காலை மடக்கி உட்கார வேண்டும் (அதாவது மண்டியிட்டுக் கொள்ள வேண்டும்). இங்ஙனமே மீண்டும் மீண்டும் அம் மரபுத் தொடர் சொல்லப்பட்டு, ஒவ்வொரு தடவையும் காமாட்சி என்று முடிகிற பெண் தன் காலை மடக்கிக்கொள்ள வேண்டும். இரண்டாந் தடவையாகக் காமாட்சி என்று முடியும் பெண் தன் மறு காலையும் மடக்கினவுடன் எழுந்து போய்விட வேண்டும். இங்ஙனம் ஏனைப் பதின்மரும் எழுந்துபோய் ஓரிடத்திற் கூட்டமாயிருப்பர். | பின்பு, தலைமையானவள் ஓரிடத்தில் தனிமையாக இருந்துகொண்டு, "முதலில் போன காமாட்சி ஓடிவா" என்பாள். அவள் வந்தவுடன் "உன் குழந்தையை என்ன செய்தாய்?" என்று |
|
|
|
|