தமிழ்நாட்டு விளையாட்டுகள் | 85 |
ஆட்டுத் தோற்றம் : அரண்மனைப் பூந்தோட்டத்திற்குக் காவலாயிருந்த ஒரு மகமதியன், தன் காவல் தோட்டத்தில் பூப்பறித்ததொரு பிள்ளையைப் பிடித்துக்கொண்டு, அவள் பெற்றோர் எவ்வளவு பணந்தந்தும் ஏற்காமல் கடைசியில் புலவு அல்லது கறிச்சோறு தருவதாகச் சொன்னவுடன், அப் பிள்ளையை விட்டுவிட்ட செய்தியை, நடித்துக் காட்டுவதுபோல் உள்ளது இவ் விளையாட்டு. | | |
|
|