|            4. பூப்பறிக்க வருகிறோம்  |         
                  |                பொதுவாகப் பதின்மருக்குக் குறையாத பல பிள்ளைகள் உத்திகட்டிச் சமமான இருகட்சியாகப்           பிரிந்து, ஓர் அகன்ற தெருவிலேனும் ஊர்ப்பொட்டலிலேனும் இரு கட்சிக்கும் பொதுவாக           ஒரு நடுக்கோடு கீறி, அதற்கு இப்பாலும் அப்பாலும் நின்றுகொள்வர். பின்பு           இருகட்சியாரும் கட்சிவாரியாகக் கைகோத்து முன்பின்னாகப் பின் வருமாறு பாடிக்கொண்டு,           மாறிமாறி நடுக்கோடு வரைசென்று மீள்வர். |         
                     முதற் கட்சியார்           : பூப்பறிக்க வருகிறோம்,            பூப்பறிக்க           வருகிறோம், இந்த நாளிலே. |         
                     இரண்டாங் கட்சியார்           : யாரனுப்பப் போகிறீர்?            யாரனுப்பப்           போகிறீர்? இந்த நாளிலே. |         
                     மு :               கமலா அனுப்பப் போகிறோம்,             கமலா அனுப்பப்           போகிறோம், இந்தநாளிலே. |         
                     இ :               எந்தப்பூ வேண்டும்?             எந்தப்பூ வேண்டும்?           இந்த நாளிலே. |         
                     மு :               மல்லிகைப்பூ வேண்டும்,             மல்லிகைப்பூ வேண்டும்,           இந்த நாளிலே. |         
                  |      இன்னபூ           வேண்டுமென்று சொல்லி முதற்கட்சியார் பாடி முடிந்ததும் , இருகட்சியினின்றும் ஒவ்வொரு           பிள்ளை முன்சென்று நடுக்கோட்டை யடுத்தவுடன், இருவரும் ஒருத்தியை யொருத்தி பிடித்திழுப்பர்.           கோட்டிற்கப்பால் இழுத்துக் கொள்ளப்பட்ட பிள்ளை எதிர்க்கட்சியைச் சேரும்.           பின்பு முன்போற் பாடி, வேறிருவர் இழுப்பர். இங்ஙனம் இவ்விருவராய் எல்லாரும் இழுக்கப்பட்டபின்,           மிகுதியாகப் பிள்ளைகள் சேர்ந்திருக்கிற கட்சியார் வென்றவராவர். |