89 | தமிழ்நாட்டு விளையாட்டுகள் |
5. தண்ணீர் சேந்துகிறது | நான்கு பிள்ளைகள், சதுரமாக நெருங்கி ஒற்றைக் காலால் நின்று மற்றைக் காலைக் கால்மேற்போட்டு, நடுவிற் கிணறு போன்ற பள்ளம் தோற்றி, | "தண்ணீர் சேந்தித் தண்ணீர் சேந்திக் குடத்திலே ஊற்று, பூப்பறித்துப் பூப்பறித்துக் கூடையிலே போடு, விற்றுவிற்றுப் பணத்தையெடுத்துப் பெட்டியிலே போடு," | என்று பாடிக்கொண்டு, தண்ணீர் சேந்திக் குடத்திலே ஊற்றுவதுபோன்றும், பூப்பறித்துக் கூடையிலே போடுவது போன்றும், பூ விற்ற பணத்தைப் பெட்டியிலே போடுவது போன்றும், அவ்வவ் வடிக்கேற்ப அவிநயஞ் செய்வர். | ஒற்றைக் காலில் நிற்கும் பயிற்சியை இவ் விளையாட்டாற் பெறலாம். | | |
|
|