பக்கம் எண் :

1

Untitled Document

1. குயில் தினசரி


குயில், தினசரி, புதுவை 13.9.48 ப.


     ஓராண்டாகக்   ‘குயில்’   மாதஇதழாக   மட்டும் நடந்து வருகிறது.
இன்று முதல்   அது   தினசரியாகவும்   வெளிவருகிறது சிறிய அளவில்.

1.      இந்திய யூனியனிலிருந்து திராவிடநாடு விடுதலை
 பெற வேண்டும் .
2.      உடனடியாகப் பிரஞ்சிந்தியா இந்திய யூனியனில்
 சேரக் கூடாது.
3.      இந்திய யூனியனில்  சேரமறுத்தபின்  அது தன் முழு
 இடையூறுகளைக் களைந்து கொள்ளவேண்டும். இவைகளை
 நோக்கமாகக் கொண்டு  ‘குயில்’ நாடோறும்  பணி செய்து
 வரும் .

     பொது மக்கள்    அங்கங்கு,    அன்றன்று ஏற்படும் குறைபாடுகள்
குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் பற்றிச் சுருக்கமாகக் குயிலுக்கு எழுதியனுப்பி
உதவலாம் .

     அரசினரும் அலுவல் மாற்றம்,தமக்குக் கிடைக்கும்   அயல்நாட்டுச்
செய்தி முதலியவற்றைத் தந்து உதவலாம்.

     எல்லா வகையிலும் ஆதரிக்க வேண்டுகிறோம்.