பக்கம் எண் :

122

Untitled Document


     ஏற்படவேண்டும்   அதன்   வாயிலாகக் கிளர்ச்சி ஏற்படவேண்டும்.
சந்தடிச்     சாக்கில் புதுவை மக்களின் சாக்கடையை அகப்பைக் கட்டிச்
சுரண்ட வேண்டும்       கைக்கூலியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
வீடுகட்ட வேண்டும். கார்   வாங்கவேண்டும். இவ்வளவுதான் அவர்களின்
எண்ணம்.

     ஏதோ   சிலர்  புதியராக, நல்லவராகவந்துள்ள   பெரிய அலுவலர்
களையும் ஒழித்துக் கட்டத்தான்   பரபரப்பாக வேலை நடக்கிறது இங்கே.

     அரிசி  இன்றி  மக்கள் ஒழிவதில் அவர்கட்குப் பரபரப்பு ஏற்படவே
இல்லை. ஏற்படப் போவதுமில்லை.

     தமிழக   அரசினர் - அமைச்சர்கள் அங்குச்  சேர்க்கும் அரிசியில்
எமக்குப்  போதிய  அளவு உதவி செய்தால் அது உயர்ந்ததாக இருக்கும்.
இன்றைய விலை ஒரு ரூபாய்க்குப் பட்டிணம் படி முக்காற்படி!!