பக்கம் எண் :

123

Untitled Document

33. கவிஞர் நினைவிற்கு !


(குயில், குரல்-1, இசை-43, 31.3.1959)


     எந்தன்   உந்தன்   என்று  தமிழில் சொற்களே இல்லை. இதை முன்
ஒருமுறை   விளக்கியுள்ளோம்.   இவ்வாறு   உள்ள   பிழைச்சொற்களைப்
படித்தவர்களே       எழுதுவதென்றால்,    இராஜகோபாலாச்சாரியாருக்கும்
இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

     எம் என்பது   பன்மைச்சொல் அதனோடு பன்மைக்குரிய தம் என்பது
தான் சேரும்   எனவே   எந்தம் என்று எழுதவேண்டும். உந்தம் என்பதும்
அப்படியே.

     என்   என்பதும்   உன்   என்பதும்  ஒருமைக்குரியவை. இவற்றோடு
ஒருமைக்குரிய   தன்  சேரவேண்டும் எனவே என்றன், உன்றன் என எழுத
வேண்டும்.

     போக,   வர,   இருக்க  என   இவ்வாறு வரும் சொற்களுக்குச் செய்
என்னும்     வாய்ப்பாட்டு     வினையெச்சம்     அல்லது   (சுருக்கமாய்)
செயவெனெச்சம்     என்பார்கள்.   இவற்றின்   முன்   வல்லெழுத்துக்கள்
அவையாவன. க,ச,த,ப என்பவை வந்தால் மிக வேண்டும், எப்படி?

     போக கண்டான் - போகக்கண்டான்

     வரச்சொன்னான், இருக்கின்றான் எனப் பகிர்ந்தான் என.

     க,ச,த,ப என்று கூறினால்      (க) கா, கி முதலியவற்றையும் (ச) சா,சி
முதலியவற்றையும் (த) தா,தி  முதலியவற்றையும் (ப) பா,பி முதலியவற்றையும்
குறிக்கும்,

     கவிதை எழுதக் கசடறக்கற்க என்பது அகவலடி. இதில் எழுத என்னும்
செயவெனெச்சத்தின்  முன் க என்ற வல்லெழுத்து வந்ததால்  எழுதக்கசடற
என மிகுந்தது. அறக்கற்க  என்பதில் அற என்பது  செயவெனெச்சம்!அதன்
முன் ‘க’ என்னும் வல்லெழுத்து வந்ததால் ‘அறக் கற்க’ என மிகுந்தது.