பக்கம் எண் :

124

Untitled Document

அழகுக் கழகு கூட்டுவார் போலக்
குழந்தைக்குப் பன்மணி இழைகள் கூட்டினர்


     என்பது அகவலின் இரண்டடி. முதலடியின் கடைசியில் உள்ள போல
என்பது செயவெனெச்சம்.அதன்முன்    இரண்டாம் அடியின் முதலிலுள்ள
வல்லெழுத்து வந்தது.அதனால் போல     குழந்தை, போலக்குழந்தை என
மிகுந்தது.

     கவிஞர்கள் சிலர் பாட்டில்  வரும் ஓரடி கடைச்சொல்லையும் அடுத்த
அடியில் வரும் முதற்சொல்லையும்   தொடர்புபடுத்திப் பார்ப்பதே இல்லை.
அப்படியானால்  இவர்கட்கும்   சுதேசமித்திரன்,   தினமணிக்கும்   என்ன
வேறுபாடு?

     அகரத்தை   அதாவது ‘அ’ என்பதை  ஈற்றினுடைய சில சொற்களின்
முன் வல்லினம்(க,ச,த,ப) வந்தால் இயல்பாகும் என்பதற்கு நன்னூற்  பாட்டு
ஒன்றுண்டு.

செய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப்
பெயரின் எச்சம் முற்று, ஆறனுருபே
அஃறிணைப் பன்மை அம்ம முன்இயல்பே.


     செய்யிய   சென்றான்   என்பதில்  செய்யிய என்பது வினையெச்சம்.
உண்ணிய,     காணிய   என்பன  முதலியனவும் அவ்வினையெச்சங்களே!
செய்யிய  சென்றான்   உண்ணிய போனான்     காணிய   சென்றான் என
இயல்பாகும்.

     வந்த குதிரை, வருகின்ற  குதிரை என்பவற்றில் உள்ள வந்த,வருகின்ற
என்பன    குதிரை  என்ற  பெயரைக் கொண்டு முடிவதால் வந்த,வருகின்ற
என்பன பெயரெச்சங்கள். இவற்றின்  முன் வல்லினம் வந்தால் வந்த குதிரை
என  இயல்பாகும்.  வந்த,     வருகின்ற,   போகின்ற,    போன  என்பன
போன்றவையும்பெயரெச்சங்களே!

     வந்தன   குதிரைகள்,  வருகின்றன  குதிரைகள்   என்பவற்றில் வந்தன
வருகின்றன  என்பவை  முற்று. வந்தாள்,  வந்தான், வந்தார், வந்தது எனப்
பல முற்றுக்கள்   உள்ளன.   அவைகளைப்   பற்றி   இங்கே பேச்சில்லை.
அகரத்தை   இறுதியாக   உடைய வந்தன முதலியவைகளைப் பற்றித்தானே
இங்கே கூறவந்தது. வந்தன  குதிரை இடையில் ஒற்றுமிகாது வந்தன குதிரை
என்றே எழுத வேண்டும்.