பக்கம் எண் :

125

Untitled Document


     செய்தன   செய்கின்றன,   உண்டன,   உண்ணுகின்றன அனைத்தும்
முற்றுக்களே.

     தன் கைகள்   என்றது தன்னுடைய நகைகள் என்ற  பொருளுடையது.
தன என்பதன் இறுதியில்  உள்ள ஆ ஆறாம் வேற்றுமையின் பன்மையுருபு.
இதன்முன் வல்லினம் வந்தால்  இடையில் ஒற்று மிகாது. தன கைகள் என்று
இயல்பாகும்.   என,   உன   என்பன   அனைத்தும்   ஆறன்  உருபைக்
கொண்டனவே.

     அம்ம   கொற்றா   என்பது    இடைச்சொற்றொடர். அம்ம என்பது
வியப்பைக் குறிக்க வரும் இடைச்சொல். இடையில் ஒற்று மிகாது.

     அம்ம தேவா-அம்ம பூதா என்பனவும் அவையே.

     க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று    இவைகளைக்   கடைசியில் வைத்துக்
கொண்டு   வருகின்ற  சொற்கள்   அனைத்தும் வன்றொடர்க் குற்றியலுகரச்
சொற்களேயாகும்.    சுக்கு,   பாக்கு,   உப்பு,   ;காப்பு, தச்சு, நீச்சு, பாட்டு
பட்டு   முத்து,  கூத்து, புற்று, நேற்று       என்பனவும்  இவை  போன்ற
பிறவும்   வன்றொடர்க்   குற்றியலுகரச்   சொற்களே.  இவற்றின் முன்வரும் வல்லெழுத்து மிகும். எப்படி?

     சுக்குத் தின்றான்:   பாக்குப் போட்டுக் கொண்டான்:  தச்சுப் பொருள்
நீச்சுப் பந்தயம் என. சுக்கு  தின்றான் என வரவே வராது. போயிற்றுக்குதிரை
என்பதில்   போயிற்று   என்பதும்   வன்றொடர்க் குற்றியலுகரமே ஆயிற்று
கூவிற்று என்பவையும் அவையே.

     ஆயினும் கூப்புகை,    நாட்டு புகழ் என்பன மேற்சொல்லியது போல்
மிகாது, கூப்புகை, நாட்டுபுகழ்    என   இயல்பாகவே இருக்கும் ஏன் எனில்
கூப்புகை, நாட்டுபுகழ் என்பன    வினைத்தொகை நிலைத்தொடர்கள். கூப்பு
கை என்பது கூப்புகின்ற கை,    கூப்பிய கை,   கூப்பும் கை   என மூன்று
காலத்திற்கும்   ஒத்து    வருவதால் வினைத்தொகை. நாட்டு புகழ் என்பவும்
அப்படியே! கூப்புக்கை,    நாட்டுப்புகழ்  என்று போடவே கூடாது. நாட்டின்
புகழ் என்பதில் ப் இடையில் போடலாம்.

     அங்கு,   இங்கு,   உங்கு,     ஆங்கு, இங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு
ஆண்டு, ஈண்டு, யாண்டு   என்பன   இடப்பொருளில் வரும் மென்றொடர்க்
குற்றியலுகரங்கள். இவைகளின் முன்வரும் வல்லினம் மிகும். எப்படி? அங்குக்
கண்டான் இங்குச் சேர்ந்தான். ஆண்டுச் சென்றான், ஈண்டு போந்தான் என.

     ஆங்கு அவன்தான்    அழகு அழிந்தான் - ஒருவர் எழுதிய அகவல்
அடி இது.