பக்கம் எண் :

126

Untitled Document


     அகவல் அடியில் நான்கு சீர்கள் வரவேண்டும். இதில் வந்துள்ளனவா
எனில் இல்லை. ஏன்?

     ஆங்கு   அவன்   ஆங்கவன்   என்று   புணரவேண்டும். இப்படிப்
புணர்த்தவே  இரண்டு சீரும் ஒரு சீராகின்றது.   அழகு அழித்தான் என்பது அழகழித்தான்
எனப் புணரும்.

     ஆங்கவன்   தான்   அழகழிந்தான் என்ற மூன்று சீர்தாம் உள்ளன.
இன்னும் ஒரு சீர் எங்கே போவது!   பிழைதானே!  இந்த அடியை எப்படித்
திருத்தினால் பிழையிராது எனில்,

     ஆங்கே அவன்தான்  அழகை அழித்தான் - எனில் பிழை இல்லை.

     சொற்களைப் பிரித்து   எளிதில்   பொருள்  விளங்குவதற்காக எழுதுவதாய் நினைக்கிறார்கள். பிரித்து எழுதலாம் அதைப்   புணர்த்திப் பார்க்கும் போது
அளவு குறையக்கூடாது.

     இந்தப் பிழைகளைப்புகழ் பெற்றவர் என்று கருதப்படும் கவிஞர்களும்
செய்கின்றார்கள்.

      மரத்தில் அதோபார் பறவைக்கூடு
     அதுமிக அழகாய் இல்லையா அண்ணே


என்பன அகவல் அடிகள்.

     இவற்றில்   முதலடியின்   கடைசிச்சொல்   கூடு   என்பது.   அது
குற்றியலுகரம்.   அடுத்த   அடியின்  முதலிலுள்ளது அது என்பதில் உள்ள
அகரத்தோடு   புணரவேண்டும்.  கூடு  அது - கூடது என்று. எனவே கூடு
என்பது டு இல்லாமற் போகின்றது. கூ மட்டும் மிஞ்சுகிறது.

     மரத்தில்   அதோபார்  பறவைக்கூ  என்றால் கூ மட்டும் ஒரு சீரல்ல
இன்னும்   ஓரெழுத்தாவது   வேண்டும். மரத்தில் அதோபார் பறவைக்கூடே
என்று திருத்திக் கொண்டால் பிழை நேராது.