பக்கம் எண் :

127

Untitled Document

34. தமிழ்


(குயில், 7.4.1959)


     யாம்    ‘‘வந்தவர்   மொழியா?   செந்தமிழ்ச்   செல்வமா?’’ என்ற
தலைப்பின்கீழ்    எழுதிவரும் சொல்லாராய்ச்சி பற்றி அடிக்கடி அஞ்சல்கள்
வருகின்றன.அவையனைத்தும்     நம்   தமிழர்களாலேயே   எழுதப்
பெற்றவையாகும்.

     அவ்வாறு   நம்   தமிழர்கள் எழுதும் அஞ்சல்களில் காணப்படுவன
பெரும்பாலும்,அவ்வாரியன் இவ்வாறு தங்கள் சொல் விளக்கத்தை மறுத்தான்
அப்பார்ப்பான் இப்படி மறுத்தான் என்பனவேயாகும்.

     சிறுபான்மையாக,     இன்ன   தமிழ்ப்புலவர்   முன்னமே  இப்படி
எழுதியிருக்கிறார்   இன்ன   பேராசிரியர் முன்னமே இப்படி எழுதியுள்ளார்
அவைகள்       அனைத்தும்   உங்கள்   கருத்துக்களை   எதிர்க்கின்றன
என்பவையாகும்.

     ஆயினும்   எந்த  ஆரியனும், எந்தப் பார்ப்பனனும் எமக்கு நேரில்
எந்த மறுப்பையேனும் தெரிவிக்க துணிந்தானா எனில் இல்லவே இல்லை.

     எந்த     தமிழ்ப்புலவராவது,   எந்த   தமிழ்ப்பேராசிரியராவது தம்
நிலையில்     நின்றோ   பார்ப்பனரைச்   சார்ந்து   நம்   ஆராய்ச்சியை
மறுத்துள்ளார்களா எனில் இல்லவேயில்லை.

     இவ்வகையிலிருக்கும் ஒரு பார்ப்பனக்கீழ்மகன் தன் அண்டையிலிருக்
கும்   தமிழனை   நெருங்கி  அந்தத் தமிழனின் மூளையைக் குழப்பினாலே
போதும் என்று கருதி   இன்ன  சொல் தமிழ்ச் சொல்லன்று அது ஆரியமே
என்பான்.

     ஏனடா   பார்ப்பனனே   உனக்கென்னடா   தெரியும்.  தெரிந்தால்
காரணத்தோடு மறுப்பு எழுதேடா என்று கேட்க நம்  தமிழனுக்கும் போதிய
கையிருப்பும் துணிபும் இருப்பதில்லை இது வருந்தத் தக்கது.

     தமிழ்ப்புலவர்களும் தமிழ்ப்பேராசிரியர்களும் இன்று எதை அடைந்து
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றார்கள் எனில் அது சிறை  அன்று: அண்ணாந்தான்!