காலத்தில் பிரஞ்சிந்தியன் ஒவ்வொருவனும் தன் நாட்டின் கடமையைச் செய்திருக்கிறான்.அஞ்சாது செய்தான்,பொருளால், உடலால், உயிரால்! அங்கே பிரிட்டீஸ்காரனிடத்திலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட ‘‘கை’’ ஒவ்வொன்றும் பிரஞ்சிந்தியன் ரகசிய முறையில் அனுப்பிய ‘ இருப்புக்கை ’ யல்லவா? இங்குள்ளவர்கள் பிரஞ்சுக்காரருக்கு அடிமைகள் அல்லர். அவர்களுக்கு இங்குள்ள உரிமையைக் கேளுங்கள்’’ இங்கு அடைக்கலம் புகுந்த பாரதியார், வ.வெ.சு. அரவிந்தர், சர்மா இன்னும் இங்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாத மிகப்பலர் ஆகியோருக்குப் பிரஞ்சிந்தியர் செய்துள்ள உதவியை - அதன் விரிவை ‘தினமணி’ கேள்விப்பட்டிருக்கலாம்.பிரஞ்சிந்தியர் பிரஞ்சுக்காரனின் அடிமைகளாயிருந்தால் அத்தகைய உதவியை நாங்கள் செய்திருக்க முடியாதே.அப்போது பிரஞ்சிந்தியரின் நோக்கத்திற்குப பிரஞ்சுக்காரன் ஓரிம்மியும் எதிராயிருக்க முடிந்ததுமில்லையே ! எதிராயிருந்ததுமில்லையே.இது பற்றிப் பின்னும் எழுதுகிறோம்.
|