பக்கம் எண் :

16

Untitled Document
9. ‘தினமணி’ தெரிவிக்கிறது


குயில், தினசரி, புதுவை, 22.9.48 பக்.2-3


     பிரஞ்சிந்தியத்  தேர்தல்கள் என்ற தலைப்புடன் 21.9.48ல் ஒரு
தலையங்கம் எழுதியிருக்கிறது ‘தினமணி’.

     அத்தலையங்கத்தின் ஓரிடத்தில்,   கோர்ட்டுகள்  சம்பந்தமாக
மட்டுமே சில       இடைக்கால ஏற்பாடுகள் (  இரண்டு,   மூன்று
வருஷங்களுக்கு ) இருந்து   வரும்,மற்ற அம்ஸங்களில் புதுவையும்,
காரைக்காலும் தாலுக்கா அல்லது பிர்காக்களாகவே இருக்கும் என்று
கூறுகிறது.

     இத்தொடர்மொழிகளில்    முற்பகுதியானது      பிரஞ்சிந்திய
வக்கீல்களைத்    தட்டிக்   கொடுக்கிறது.         பிற்பகுதியானது
பிரஞ்சிந்தியப் பொது மக்களை வருந்தச் செய்துவிடுகிறது.

     பிரஞ்சிந்தியாவில் கலவரம்  நடப்பதென்பது    மெய்காரணம்
பிரஞ்சிந்தியச சட்டமல்ல. வக்கீல்கள் காரணர்.அவர்கள் அரசியலில்
.தலையிடுவதை இங்குள்ள    பொதுமக்கள் வெறுக்கிறார்கள்.சென்ற
சில தேர்தல்களில் கூடப் பெரும்பான்மை வக்கீல்களுக்கு இப்போது
பதவி இல்லை.

     அவர்களில் பலர்          பிரஞ்சிந்தியா இந்திய யூனியனில்
உடனடியாகச்     சேர்ந்துவிட வேண்டும்       என்று இப்போது
சொல்வதற்குக் காரணம்  இனியும் தமக்குப் பதவி கிடையாது என்று
அவர்கள் உறுதியாக நினைப்பதுதான்.

      இங்குள்ள  பொதுமக்கள்,இது   இந்தியா யூனியனில் சேர்ந்து
விட்டால் உடனே,  புதுவை, காரை   முதலியவைகள் கேவலம் ஒரு
தாலுக்காஅல்லது      பிர்க்காவாகி விடுமே என்று நினைத்துத்தான்,
உடனடியாக இந்தியா யூனியனில் சேர மறுக்கிறார்கள்.

     பிரஞ்சிந்தியர்களுக்குத்         தேசபக்தியில்லாமல் இல்லை,
இந்தியாவின்  தேசியக் கிளர்ச்சியை  இன்றல்ல   வெகு நாட்களின்
முன்பே பிரஞ்சிந்திய மக்களே நடத்தினார்கள் என்றால்   மறுப்பார்
உண்டா? வங்காளப் பிரிவினைக்காலத்தில்,   திலகர்     காலத்தில்,
கப்பலோட்டிய சிதம்பரனார்