பக்கம் எண் :

15

Untitled Document


     எல்லாத் துறையிலும் அவன்     ஏற்படுத்திய  சட்டந்தானே
வேலை   செய்கிறது ? இன்னும் சொல்லப்  போனால் அதைவிடக்
கொடுமையான சட்டங்களும்,   செய்யப்பட்டிருக்கின்றன.  உரிமை
என்பது என்ன எனில்,மக்களின்  உணர்ச்சி,தேவை இவைகளுக்குத்
தடையில்லாத ஓர் நிலை வெள்ளைக்காரன் போய்     விடுவதல்ல
உரிமை!

     முன்பெல்லாம் - வெள்ளைக்காரன் இருக்கும் போதெல்லாம்,
பழித்து   வந்தோமே     ‘‘அந்தச்    சட்டந்தான்   இப்போதும்!
வெள்ளைக்காரன் இருக்கும்போது நீவிர் என்ன அடிமை நிலையில்
இருந்தீரோ,அதே அடிமை   நிலையில்தான் இப்போதும் இருந்து
வருகிறீர்.

     ஆனால் விரைவில்,மக்கள் தேவைக்கும்,உணர்ச்சிக்கும் ஏற்ற
வகையில் இந்திய யூனியன் திரும்பியே தீரும்.திரும்பி       வரத்
தொடங்கிவிட்டது. மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

     அப்போது - விரைவில்       நீங்கள் உரிமையடைந்த பின்,
சட்டங்கள் நல்லபடி,அமைக்கப்பட்டபின்-இதோ நாங்களும் இந்திய
யூனியனில் சேர்ந்து கொள்ள ஆவன செய்கிறோம்.