கட்சிகள் இருட்டறையினின்று வெளியே வரவேண்டும். தமிழர்க்கு நல்லது செய்வதென்பது தமிழை மீட்டுத் தமிழ்த் தாயின் பகைவர்களை ஒழித்துத் தமிழ்ப் பயிரை வளர்ப்பதே. தமிழைக் கொன்று தமிழர்க்கு நலம் செய்வது என்பது உயிரைப் போக்கி உடம்பைத் தென்றலில் உலவவிட எண்ணுவதேயாகும். என் கட்சி வலிமையுடையது என்று ஒருவர் மார்தட்டலாம்;என் கட்சி இதற்குமுன் தமிழர்க்கு நல்லது செய்திருக்கிறது என்று இறுமாப்புக் கொள்ளலாம். நான் எல்லாம் உணர்ந்தவன் என்று பிதற்றலாம்; ஆயினும் தமிழுக்கு என்ன செய்தாய்? என்று ஒரு தமிழன் கேட்டால் தலையைக் குனியவேண்டி வரும். கட்சிக்காரர் எண்ணிப் பார்க்க!
|