பக்கம் எண் :

253

Untitled Document

93. கூலித் தொண்டு கூடாது!


(குயில், குரல்-3, இசை 30, 10.1.1961)


     சென்ற பொதுத் தேர்தலில் பெரியார் தம் தொண்டர்களை யெல்லாம்
காங்கிரசை  ஆதரிக்கக்   கட்டளையிட்டார்.  பெரியாரும் பட்டித் தொட்டி
களிலெல்லாம் முழக்கம் செய்தார்.

     காங்கிரசுக்கு - காமராசருக்கு    வெற்றி கிடைத்தது. வெற்றிப் பெற்ற
காமராசரும்,   சுப்பிரமணியம்    முதலியஅமைச்சரும் பெரியாருக்கு நன்றி
தெரிவிக்கும் முறையில்  ஏதாவது  இரண்டு சொற்களாவது சொன்னார்களா?
அல்லது   இகழ்ந்து  பேசாமல்  சும்மாவாது இருந்தார்களா என்றால் அது
தான்  இல்லை.

     தி.க.வை   யார் அழைத்தார்கள்? அவர்களாக வலிய வந்து எங்களை
ஆதரித்தார்கள்   எனப்   பலவாறு  கூறித்  தீர்த்தார்கள். பெரியார் அதை
யெல்லாம் காதில் போட்டுக்  கொள்ளவில்லை.  ஆனால், காமராசர் எம்மை
இகழ்ந்தாலும் நாம்   அவரைத்தான்  ஆதரிக்கவேண்டும் என்றார் பெரியார்.
பொதுநலம்   கருதி   பெரியார்  இவ்வாறு சொன்னார் என்று பொதுமக்கள்
எண்ணிக் கொள்வார்களா?

     பல   ஆண்டுகளாகவே   இந்நிலையை   எதிர்த்து   ஒரு  பேச்சும்
பேசவில்லை பெரியார். சில ஆண்டுகளாக தமிழை எதிர்த்து பேசி வருகிறார்
பெரியார். அவை   பொதுநலத்திற்குக்   கேடு சூழ்வன என்று பொதுமக்கள்
எண்ணாமல் இருந்து விடுவார்களா? சென்ற பொதுத் தேர்தலில் காமராசை -
காங்கிரசை   ஆதரித்த   பெரியார்,   ஒன்றின்   மேல்  ஒன்றாக இரண்டு
பிழைகளைச் செய்துவிட்டார்.

     தேர்தலில் நிற்பதில்லை என்று கூறிக்கொண்டு,தேர்தலில் நிற்பவர்களை
ஆதரித்து நின்றது ஒன்று.

     காங்கிரசை - காமராசரை   ஆதரிக்க வேண்டுமென்பதற்காக கண்ணை
மூடிக்கொண்டு பார்ப்பானுக்கும் வாக்குப் பிச்சைக் கேட்டது மற்றொன்று.

     பெரியார்     சொல்லைத்   தட்டாமல்   பின்பற்றத்   தொண்டர்கள்
இருக்கின்றார்கள்  என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான் ஆனால் இனியும்