பக்கம் எண் :

277

Untitled Document


     கருவாடும் கத்தரிக்காயும்,   விலை குறைய வேண்டுமென்று திருமணப்
பந்தலுக்கு தீ வைத்தன.

     நெல்லிக்காய்      விலை   குறைய   வேண்டுமென்று   கல்லூரியில்
வாலவிழ்த்தன.  பருத்தி விலை குறைய வேண்டுமென்று மருத்துவ விடுதியில்
பல் இளித்தன மந்திகள்.

     நாட்டை     ஆளுகின்றவர்கள் இந்தக் காட்டு விலங்குகளைக் கட்டிப்
பிடித்துச் சிறையில் அடைத்தார்கள்.

     மந்திகள் பல, மன்னிப்பு கூறி வெளிவந்தன.

     மற்ற குரங்குகள் மேல் வழக்குப் போட இருக்கிறார்கள். ஆளவந்தார்!