(குயில், சென்னை, 1.8.62)
செஞ்சியில் கொழுப்பு மிஞ்சிக் குரங்குகள் ஆடல் அரங்குகள் நடத்தின. ஊரிற் புகுந்த கூரையைப் பிய்த்தன.வாழை சாய்த்தன. கூழை உருட்டின. முள்ளை ஒடித்தன. பிள்ளையைக் குத்தின. கருவைச் சிதைத்தன; தெருவை எரித்தன. கொல்லையிற் புகுந்தன. கல்லை எடுத்தன; தேரில் எறிந்தன; ஊரில் எறிந்தன. செஞ்சியில் குரங்குகளை. ‘செஞ்சிக் கிளிகள்’ என்று சொல்வதுண்டு. இப்போது கூட அழகில்லாத ஒருவனைப் பார்த்து இவன், ‘செஞ்சிக் கிளி’ என்று சிறப்புப்படுத்துவது உண்டு. ‘செஞ்சிக்கிளிகள்’ செஞ்சியில் பெருத்து விட்டன. அவை ஊரிற் புகுந்து செய்த கிளரச்சியைத்தான் மேலே குறித்துள்ளேன். ஊரில் நிலவிய அமைதியை அவை மறியல் செய்தன. இந்த ‘மறியல்’நடந்து இப்போது ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. ஐம்பது ஆண்டுகளின் பின் அதே மறியலை இப்போது சென்னை, வேலூர் முதலிய இடங்களில் பார்க்க நேர்ந்தது. தி.மு.க. “செஞ்சிக் கிளிகள்’’ செய்த அறப்போரால் அஞ்சி நடுங்கினர் மக்கள். விலைவாசி குறைய வேண்டுமென்று தொலைபேசியைச் சுட்டெரித்தன குரங்குகள். அரிசி விலை குறைய வேண்டுமென்று கருவுற்ற மங்கையைக் கண்ணீர் சிந்த வைத்தன - ‘செஞ்சிக் கிளிகள்’. நெல்லின் விலை குறைய வேண்டுமென்று கல்லை விட்டு எறிந்தன.
|