பக்கம் எண் :

275

Untitled Document


     தமக்குரியதான  பெரும்புகழை அவர் அடைந்தே தீர வேண்டும். அவர்
தமிழர்,தன்னலமற்றவர், பிறர் நலம்பேணும் பெருந்தகை.

     வடவரை அவர்   எதிர்க்க  வேண்டும் தமிழுக்காக! இந்தி ஒழிப்புக்காக
நாலு கோடி தமிழர்களுக்காக!

     தமிழர்   பக்கம்  காமரசார்  சேரவேண்டும். அதனால் வடவர் எதிர்ப்பு
வந்தால் மகிழவேண்டும்.

     தமிழை நோக்க முதலமைச்சர் பதவி மிகச் சிறியது.
    
     வாழ்க காமராசர்!