(குயில், குரல்-1, இசை-21, 21.10.1958)
அரிசிச் செய்தியில் புதுவை அரசினர் விழிப்போடு இருக்க வேண்டும். வேண்டுமென்று கொண்டால் வெண்ணெய் போற் கொள்ளலாம்.அரிசி மலிவான விலைக்குக் கிடைக்க வேண்டுமே என்று புதுவை அரசினர் நினைத்தால் அடுத்த வினாடியே வெற்றி காண முடியும். இன்று புதுவை மக்கள் அடைந்துள்ள இரங்கத்தக்க நிலையை அவர்கள் என்றுமே நுகர்ந்ததில்லை. எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன என்று இருக்கத்தக்க ஒரு பெரிய ஆற்றல் இன்றைய ஆட்சியாளர்க்கு வந்துவிடவில்லை. உடனே அரிசி, புதுவையில், குறைந்த அளவு புதுவைப் படியால் ஒரு ரூபாய்க்கு நாலு படி கிடைக்கும்படி விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
|