நம் வரிப்பணத்திலிருந்தல்ல! இந்தப் பிரஞ்சிந்தியா இன்றைக்கே இந்திய யூனியனோடு சேர்க்கப்பட்டு விட்டால் சைகோன் முதலிய இடங்களிலிருக்கும் சொத்துக்கள் கோவிந்தா! இன்னும் இங்கு நமக்கு வேண்டிய தேவைகளை நாமே செய்து கொள்ள உரிமையுண்டு. அங்கு முஸ்லீம்களும் இந்நாட்டு மக்கள் அவர்களும் உடன் பிறந்தவர்கள் என்ற அரிச்சுவடி கூடத் தெரிந்த பாடில்லை! இவைகளையெல்லாம் நாம் பன்முறை கூறிவருகிறோம் இங்குள்ள காங்கிரஸ்காரர்கள். இங்கு இத்தனை நன்மைகள் இருக்கின்றனவே இதுபோலவே அங்கும் ‘யூனியனில்’ ஏற்பாடு செய்கிறீர்களா? என்று யூனியன் காங்கிரசைக் கேட்கிறார்களா? கேட்டிருந்தால் அதற்கு அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது பற்றிப் பேசுவதேயில்லை. அங்கும் இத்தகைய நன்மைகளையும், உரிமைகளையும் ஏற்பாடு செய்கிறோம் என்றும் சொல்வதில்லை. அது தாய் நாடு - இங்கு நாம் பிரஞ்சுக்காரருக்கு அடிமையா யிருக்கக் கூடாது என்கிறார்கள். நாமா அடிமைகள்? நமக்கேற்ற தேவைகளைநாம் விரும்பியபடி ஏற்பாடு செய்து கொள்ளும் நாம் உரிமையுடையவர்களா? லீக் என்ற முஸ்லீம் ஸ்தாபனமே இருக்கக்கூடாது என்று உளறுகின்றவர்க்கே ஆதிக்கம் தந்து வரும் அவர்களா மனித உரிமை தெரிந்தவர்கள்? யார்க்கும் உரிமை எதற்கும் உரிமை என்னும் நாமா மனித உரிமை தெரியாதவர்கள்? முஸ்லீம் அறிஞர்களே உடனடியாக இந்திய யூனியனில் சேரவேண்டுமா? உடனடியாகச் சேர வேண்டாம் என்பது பற்றி நன்றாகயோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டுகிறோம்.
|