அடுத்தபடியாக அவர்,ஆளவந்தாரும் வடக்கரும் பார்ப்பனரும் தம் நலங்கருதித் தக்கவாறு தம்மைத் திருத்திக் கொள்வது நல்லது என்றும் குறிப்பிட்டார்.கண்ணீர்துளி முதலிய கட்சிகள் மனநிலையறியாது அவர்களை ஏமாற்றிப் பிழைப்பதிலேயே பெருநாட்டம் கொண்டிருப்பதாகவும் விளக்கியுதவினார்.
நாம் கூறுவதும் அதுதான். ஆயினும் சிறிது வேறுபாடு உண்டு.
கட்சித் தலைவர் திருந்தப் போவதில்லை. மக்கள் இந்தக்கிளர்ச்சிக்கு எதிர்ப்பாக இரார். ஆளவந்தார் உள்ளம் திருந்துவார். மேலுக்குத் திருந்தார் அவர்களின் வாக்காளர் நமக்கு ஆதரவாகவே இருப்பார்கள். பார்ப்பனர் திருந்தார். பார்ப்பனனுக்குப் பிறந்தவர்கள் திருந்தமாட்டார்கள். எனவே சில தனியன்கள் தவிரத் தமிழர்கள் என்ற பரந்த வானில் தமிழ்நாடு மீள வேண்டும் என்ற முழுநிலவே தோற்றமளிக்கின்றது! வெல்க தமிழ்நாடு!
|