பக்கம் எண் :

95

Untitled Document

19. பெருவானில் முழுநிலவு


(குயில், குரல்-1, இசை-27, 2.12.1958)


     26.11.58-ல்   சிதம்பரத்தில்   மூன்று   பெருங்கூட்டங்கள் நடந்தன.
காலையில்  ரத்தினா  டாக்கீசில் சாதி ஒழிப்பு மாநாடு நடந்தது. மாலையில்
சுதந்திரத்தமிழக மாநாடு நடந்தது.மாலை 7 மணி தொடங்கி அண்ணாமலை
நகர் தி.க. மாணவர் கழகச்சார்பில் பெரியாருக்கு வெள்ளிவாள் பரிசளிப்புக்
கூட்டம் நடந்தது. நகர மன்ற பெருவெளியில்!

     இம்மூன்று    கூட்டங்களிலும்   மக்கள்   உள்ளத்தை   உள்ளபடி
உணரவல்ல   பெரியார்   பேசினார்.   திராவிடர்   கழகத்தின்  தலைவர்
திரு. பொ. வேதாசலனார்  பேசினார். மற்றும் முன்மொழிதல் வாயிலாகவும்
வழிமொழிதல்   வாயிலாகவும்  அறிஞர் மிகப் பலர் பேசினார்கள். மக்கள்
வானில் முழுநிலவைக் கண்டார்கள்.

     கட்சிகள் எனப் பல இந்த நாட்டில், அக்கட்சிகள்  சொல்லுவன பல.
எதிரிகள் பலர்.அவர்கள் காட்டும்    பூச்சாண்டிகள் பல. ஆள்வோர் பலர்.
அவர்கள்    விடும்   கரடிகள்  மிகப்பல. அதனால் தமிழ்வாள் இருளாகத்
தோற்றமளிக்கிறது.

     இருள் எங்கே?  பெருவானில்  முழுநிலவைக்  கண்டார்கள் அன்று 
மக்கள்!

     தமிழ்நாட்டில்,   ஒரு  கொள்கைதான் ஒளி வீசக் கொண்டிருக்கிறது.
‘‘தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும்’’.

     இந்த ஒளிநிலவின் முன், எந்த இருளும் முன் நிற்கவில்லை.

     பட்டித்தொட்டிகளிலெல்லாம் மக்கட்  கடலைக் கண்டு கண்டு பேசிப்
பேசி   அவர்கள்  உள்ளப்பாங்கை  அறிந்தாராகிய பேரறிவாளர் பெரியார்
பேச்சிலிருந்து   மற்ற   அறிஞர்   பேச்சிலிருந்தும்  அன்று மக்கள் கண்ட
உண்மை இதுதான்.

     தமிழ்நாட்டை மீட்பதற்கான போர்த்  துவக்கமாக நடைபெறவிருக்கும்
பட எரிப்புக்கிளர்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் தமிழர் பட்டாளத்தாரின்
தொகை மிகப் பெரிது என்று குறிப்பிட்டார் பெரியார்.