பகைவர் இங்கு வளர்த்ததாக எண்ணி மகிழும் வைதிகம் கட்சிப் பூசல்கள் அனைத்தும் தமிழினத்தின் முதன்மையை அணுவளவும் அசைக்க வில்லை. அசைக்க முடியாது.
இனம் என்பது தனி மனிதனைக் குறிப்பதன்று. இனம் என்பது எண்ணிக்கை பற்றியதன்று. இனம் என்பது உருவமுடையதன்று. அது நிலைத்த ஒரு பண்பாட்டின் பெயர்.
தமிழினம் தொன்மையானது. மானமுடையது. தன்னிலைனின்று விழாததும் வீழ்ந்தால் வாழாததும் எதுவோ அதுதான் மானம் என அறிதல் வேண்டும்.
|