பக்கம் எண் :

99

Untitled Document

21. தமிழர்களும் மலையாளிகளும்
ஒரே வயிற்றுப் பிள்ளைகள்


(குயில், குரல் 1, இசை 29, 16.12.1958)


     இவ்வாறு சிலர் கூறுகின்றார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை!

     ஆனால்   ஆரியனுக்குப் பிறந்த மலையாளிகளை அந்த இனத்தில்
சேர்க்கக் கூடாது.

     நம்நாட்டை நாம் மீட்கும் முயற்சி சிறியதன்று.பிறனைக்கெஞ்சுதலால்
செப்பனிடக்கூடியதன்று. அம்முயற்சியில் இந்தநாட்டானைமட்டுமே  சேர்க்க
வேண்டும்.   ஆரியனைச்   சேர்க்கலாமா?   கலப்படங்களை   அதாவது
ஆரியனுக்குப் பிறந்தவனைச் சேர்க்கலாமா? -  ஆரியனை - ஆரியனுக்குப் 
பிறந்தவனை நம்முடன் பிறந்தவனென்று எண்ணிவிடலாமா?

     இன்று நடப்பதென்ன?தமிழன் உயிரைப்பணயம் வைத்துத் தொடங்கி
விட்டான். நாட்டை மீட்கும் போரை! இதில் ஆரியனுக்குப்பிறந்தவன் எப்படி
நடந்து கொள்ளுகின்றான்?   பார்த்தோமன்றோ!  காட்டிக் கொடுக்கின்றான்.
தட்டிக் கொடுக்கின்றான் ஆரியனை! அப்படித்தான்  நடப்பான்; அவனிடம்
வேறொன்றையும் எதிர்பார்க்கமுடியாது. உடன்வைத்துப்பார்த்தோம்  உயர்வு
செய்து பார்த்தோம். இனம் இனத்தோடுதானே ஒட்டிற்று! இனம்  இனத்தைக்
கண்டுதானே தன் வாலை ஆட்டிக் கொண்டிருக்கின்றது.

     தமிழரிற்   சிலருக்கு    மலையாளியிடம்   நட்பிருக்கலாம்.  அந்த
மலையாளியால்   தனிப்பட்ட  முறையில்  நன்மையும் இருக்கலாம்;ஆயினும்
அந்த நட்பு   என்பது   தனிப்பட்ட    வகையைச்   சேர்ந்ததாகக்கொள்ள
வேண்டுமேயன்றி     அதைக்கொண்டு     மலையாளிகள்    அனைவரும்
பொதுவகையில் நமக்கு ஒத்து வருவார்கள் என்று  கண்மூடித்தனமாக  நம்பி
விடலாகாது.

     தெலுங்கு நாடு பற்றியோ கன்னட நாடு பற்றியோ அவர்கள் நம்முடன்
பிறந்தவர்கள் என்று கூறிவிடுவதில் தீய விளைவுஒன்றுமிராது. மலையாளிகள
அப்படியல்ல!  அங்குள்ள மக்களிற்  பெரும்பான்மையோர்  பார்ப்பனர்க்குப்
பிறந்தவர்கள்.