எடுத்துக்காட்டியது போல, கவிஞர் மாத்திரம் 'ஒரு கட்சியின் கவி; குறிப்பிட்ட கொள்கைக்காகத் தமது கற்பனா சக்தியையே பாழ்படுத்துகிறவர், வகுப்பு வாதத்தை வளர்க்கிறவர்; நாத்திகர்' என்று மாத்திரம் ஒரு சிலரால் தூற்றப்படாமல் இருந்தால், அவரது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். அவர் அப்படியே இருந்தாலும் இருப்பதற்குக் காரணம் அவரது இயற்கையல்ல. இந்தத் துரதிர்ஷ்டவசமான நாட்டிலே நானாவிதமான கட்சிகள் நடமாடுகின்றன. அக்கட்சிகள் என்னும் கூடாரத்திலே கவிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வெளியேற்ற, வெட்ட வெளியிலே கொண்டுவந்து உலவச்செய்ய, தமிழர்களுக்குப் போதிய உள்ளம் இருக்குமானால், நாங்கள் தடை சொல்லமாட்டோம். அந்தக் கட்சிக்கவி என்று சொல்லப்படுபவரிடம் சொல்பவர்கள், கட்சி பேதமின்றிக் கவி என்பதற்காக மட்டும் அன்பு செலுத்தினால் போதும், இன்பம் பெறலாம். | எதற்காக? | புரட்சிக் கவிஞரின் கருத்தோவியங்களைப் பற்றி அறிஞர் சிதம்பரநாதனைப் போன்றவர்கள்தான் பேசுவது பொருத்தமாகும். ஆனால், என்னைப்போல் அவரது கொள்கையைக் கடைப்பிடித்து, நண்பர் தண்டபாணி குறிப்பிட்டதுபோல் அவருக்குத் தோழனாகவும் இருந்து, அவரது கருத்துக்களை ஏட்டிலே தீட்டியும், நாட்டிலே பேசியும், செயலிலே காட்டியும் வருபவர்கள் உரிமைக்காகப் பேசலாம். ஆகவே நானும் உரிமைக்காகக் கவிஞரின் படத்தைத் திறந்து வைக்க அருகதையுள்ளவன். அப்படித் திறந்து வைக்கும்போது, கவி கண்ட நுட்பத்தைப் பற்றியோ, கலைநயத்தைப் பற்றியோ காவிய ரசத்தைப் பற்றியோ அல்லது அவற்றுக்கு விளக்க உரையோ, விரிவுரையோ கருப்பொருளோ, பருப்பொருளோ கொடுக்க அல்ல, நான் பேச இருப்பது. | நல்ல காலம் | இப்பொழுது தமிழிலே பாடுகின்ற, தமிழுக்காக உழைக்கின்ற எல்லாக் கவிவாணர்களையும் தமிழ்நாடு |
|
|
|