பக்கம் எண் :

68பேரறிஞர் அண்ணா

தெற்கே     காடாயிருந்ததைப் பிற நாட்டார் கண்டு மெச்சத் தகுந்த
அளவு மட்டுமல்ல, பொறாமைப் படும் அளவுக்கு அழித்து நாடுகளும்
வீடுகளும்  அமைத்திருக்கிறார்கள்.  வியாபாரத்திலே தழைத் தோங்கி
இருக்கிறார்கள்.  வீரத்திலே  திளைத்திருக்கிறார்கள்.  இன்னும்  வீரம்
போற்றப்படுகிறது போர்க்களங்களிலே!
 

தமிழனுடைய     வீரம்  மங்காதிருக்கக்  காரணம், தமிழனுடைய
வீரத்திற்கும்  பிறருடைய  வீரத்திற்குமிருந்த  வித்தியாசமே.  தமிழன்
என்றும்  அக்கினியாஸ்திரம்  உபயோகித்த  தில்லை;  பாசுபதத்தைப்
பயன்படுத்தியதில்லை.   அவனது   ஆயுதங்கள்   அவனிரு  பருத்த
தோள்கள்.  இடையிலே வாள்; வாள் ஏந்தக் கை; கைக்கேற்ற கருத்து;
கருத்துக்    கேற்ற    களம்;    களத்துக்கேற்ற   காட்சி;   அங்குப்
பிணக்குவியலைக்  கண்டு  பயப்படாத காட்சிக் கேற்ற கம்பீரம். கனக
விசயரைக்   கைது   செய்ய  கங்கைக்கரைக்குச்  சென்றான்  சேரன்
செங்குட்டவன் என்றால், சென்றான் வீரர்களுடன்; வீரர்கள் சென்றனர்
வாள்களோடு;   திரும்பினர்  வெற்றியோடு,  அன்று  ஆரியம்  தாள்
பணிந்தது   வாளுக்காக.  சேரன்  செங்குட்டவன்  வெற்றி  பெற்றான்
என்றால்,    ஐயனுடைய    அருளாலல்ல;   மழையைப்   பொழியும்
வருணாஸ்திர  மில்லாமல்,  அழிக்கும்  அக்கினியாஸ்திரம் இல்லாமல்,
சேரன் சண்டையில் வெற்றி பெற்றான்.
 

இந்த   அஸ்திரங்கள், குலோத்துங்கன் இராசராசன், போன்றவர்கள்
பர்மா  மீது  படையெடுத்த போதும் பிற நாடுகளைப் பிடித்த போதும்
உபயோகப்படவில்லை.     உபயோகப்பட்டதாகச்    சான்றுகளில்லை;
தமிழர்களுக்கு   ஒரு    வீசை  இரும்பு;  ஒரு  சிறிய  உலைக்கூடம்;
கொஞ்சம்  மூளை  இவை   இருந்தால்  போதும், வாள் வடிக்க. வாள்
வடித்து  விட்டார்களானால்,   அவர்களுக்கு  முன்னேயே  இருக்கின்ற
அஞ்சாநெஞ்சமும்,   அருமைக்  கையும்  போதும்.  பர்ண  சாலைகள்
அமைக்க    வேண்டியதில்லை;  நிகும்பல  யாகங்கள்  ஏதும்  செய்ய
வேண்டியதில்லை;  ஐயனின் அருளைப் பெற. எப்பொழுது அம்மையும்
அப்பனும்  சண்டை  சச்சரவுகளில்லாமலிருக்கிறார்கள் என்ற நேரத்தை
எதிர்பார்த்துக் கொண்