பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2105

பிராமணரே. இங்ஙனமே, ஏனைவகுப்பாரும் கல்வியல்லாத மற்றத் தொழில்களையெல்லாஞ் செய்துகொண்டு, உலகுள்ளவரையும்உடனுண்டலும் மணவுறவுமின்றி, வெவ்வேறு இருப்புக்கூண்டுக் குலங்களாக இருந்துவரவேண்டுமென்று அவர்விரும்புகின்றனர். இதனால், நாட்டுமக்கள்முன்னேற்றமும் ஒற்றுமையு மின்றி, வந்தேறிகளானபிராமணர்க்கே என்றும் அடிமைத்தொண்டுசெய்துவருமாறு, வரணாச்சிரம தருமம் என்னும்குலவொழுக்கத் திட்டம் வகுக்கப் பட்டதென்பதுதெளிவாகின்றது.


இற்றைப் பிறவிக் குலங்கள்

அகம்படியன்

தொழில் - பண்டைநாளில் மறவர்குலமன்னர் மாளிகைகளில் அகம்படித் தொண்டு(இல்லப்பணி) செய்தவர். இன்று தென்மாவட்டங்களிற் பயிர்த்தொழிலும்வடார்க்காட்டு மாவட்டத் திற் கொத்த (கட்டட)வேலையும் செய்பவர்.

பிரிவு - ஐவழி நாட்டான்,கோட்டைப்பட்டு முதலிய பன்னீரக மணப் பிரிவுகள் (Endogamoussteps).

பட்டம் - அதிகாரி, சேர்வைகாரன்,பிள்ளை, முதலியார்.

"கள்ளன் மறவன் கனத்தோர்அகம்படியன்" என்னும் பழமொழி, குலந்தோன்றியவழியைக் காட்டும்.

அம்பல(க்)காரன்

தொழில் - பயிர்த்தொழிலும்ஊர்காவலும்.

பிரிவு - முத்திரியன் (முத்தரையன்),காவல்காரன், வன்னியன், வலையன் என்னும் நாலகமணப்பிரிவுகள்.

பட்டம் - சேர்வைகாரன், முத்தரையன்(முத்தரசன்), அம்பல காரன், மழவராயன் (மழவரையன்),வன்னியன், மூப்பன்.

அளவன்

தொழில் - உப்பளத்தில் உப்புவிளைத்தல்.

பட்டம் - பண்ணையன், மூப்பன்.

இடையன்

பெயர் - அண்டன், ஆயன்(ஆன்வல்லவன்),இடையன், குடவன், கோவன் (கோன், கோனான்),கோவலன், தொறுவன், பொதுவன்.