பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2121

குலப்பட்டம் - கவுண்டன்.

காமிண்டன் - கவுண்டன். மிண்டு = வலிமை. மிண்டன் - வல்லோன். காமிண்டன் = காவலன், தலைவன்.

காமிண்டன் - காவண்டன் = கவண்டன்-கவுண்டன்.

(6) 

அகம்படிய வெள்ளாளன்.
"கள்ளன் மறவன் கனத்ததோர் அகம்படியன்
மெள்ளமெள்ள வந்து வெள்ளாளன் ஆனானே".

(7) 

காரைக்காட்டு வெள்ளாளன்.

(8) 

அரும்புகட்டி வெள்ளாளன்.

(9) 

கும்பிடு சட்டி வெள்ளாளன்.

(10) 

ஆறுநாட்டு அல்லது மொட்டை வெள்ளாளன்.

(11) 

மலைகாணும் வெள்ளாளன்.

(12) 

சங்குத்தாலி வெள்ளாளன்.

வேடன்

தொழில் - வேட்டையாடல்

பட்டம் - நாய்க்கன்.

வேட்டுவன்

வகை - (1) மலை வேட்டுவன்.

தொழில் - வேட்டையாடல், பயிரிடல்.

பட்டம் - நாய்க்கன், கவுண்டன்.

(2) பாலை வேட்டுவன் (பண்டைக்காலத்தான்).

மறைந்த குலங்கள்

இறங்குசாத்து (செட்டிகளுள் ஒரு சாரார்),எயினர் (பாலை வாணர்), கணவாளன், நாட்டார்(தென்னார்க்காடு உழவர் வகுப்பார்), மழவர்(மழநாட்டுப் போர்மறவர்), மறமாணிக்கர்(மறக்குடியினர்) முதலியன. இறவுளன், கடம்பன்,களப்பாளன், காடவன், காடுவெட்டி முதலியனவும்மறைந்த குலங்களே.

மலைவாழ் குலங்கள்

காடர் (ஆனைமலை), குன்றுவர் (பழனிமலை),பழியர் (குட மலை), மலையாளி (சேரவரையன் மலை,பச்சைமலை, கொல்லி மலை), மலசர் (ஆனைமலை),மன்னான் (குடமலை), முதுவர் (நீல மலை, ஏலமலை)முதலியன.