பழிவாங்குமாறு,இருபத்தொரு தலைமுறை அரசரைக் கருவறுக்க வஞ்சினங்கூறினானென்றும், அதன் தொடர்பாகக் காந்தன்என்னும் சோழனைக் கொல்லப் புகார் வரும்போது,அச் சோழன் தன் அரசப் பொறையைத் தன் காதற்கணிகை மகனாகிய ககந்தனிடம் ஒப்புவித்து, "நான்அகத்திய முனிவர் கட்டளைப்படி திரும்புமளவும் நீஇதை ஏற்றுத் தாங்கு" என்று சொல்லிநாட்டைவிட்டுப் போனதாகவும் ஒரு கதை,மணிமேகலையிற் கூறப்பட்டுள்ளது. "மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் தோன்றல் தகாதொளி நீயெனக் கன்னி யேவலிற் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினைஇ நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குறக் காவற் கணிகை தனக்காங் காதலன் இகழ்ந்தோர் காயினும் எஞ்சுத லில்லோன் ககந்த னாமெனக் காதலிற் கூஉய் அரசா ளுரிமை நின்பா லின்மையின் பரசு ராமன்நின் பால்வந் தணுகான் அமர முனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும் ககந்தன் காத்தல் காகந்தி யென்றே யியைந்த நாமம் இப்பதிக் கிட்டீங் குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள்" | (மணிமே. 22:25-39) |
இதனால்,இராமன் காலமும் அகத்தியன் காலமும் காந்தன்காலமும் ஒன்றென்பதும், புகாரின் பழமையும்,மூவேந்தர் குடிகளின் தொன்மையும் அறியப்படும். அகத்தியர் வேதக்காலத்தில் வடஇந்தியாவில் நிகழ்ந்தஇனப்போர்க ளெல்லாம், ஆரியச் சூழ்ச்சியால்பழங்குடிமக்களும் வடதிரவிடரு மான ஒரேஇனத்திற்குள் நிகழ்ந்தவையே. உலகமுதல்உயர்தனிச் செம்மொழி பேசியவரும், ஒப்புயர்வற்றஇலக்கிய விலக்கண முடையவரும், பல்துறைப்பண்பாட்டு நாகரிகரும், கூற்றுவனையும் அறைகூவிக்குமைக்கும் படையினரும், கடல் கடந்து பல நாடுகளைக்கைப்பற்றியவரும், மாபேரினத்தாருமானபண்டைத்தமிழர் கல்வியறி வில்லாதவரும்,கையோங்கினுங் காதவழி யோடுபவரும், கையுங்காலுமாகவந்தவரும், இரந்துண்டே வாழ்பவரும்,விரல்விட்டும் எண்ண வேண்டாத சிறு தொகையினருமான,ஆரியப் பூசாரிகட்கு அடிமைப்பட்டுப் போனதையும்;இவ் விருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்ஆரிய வயப்பட்ட பேராயத் தமிழர், உரிமை
|