பிரம முனி(ரிஷி) | = | பிராமண முனிவன். | பிரம ராக்கதன் | = | தீச்சாவடைந்த பிராமணப் பேய். | பிரம யோனி | = | பிராமணப் பிறப்பு | பிரம விந்து | = | பிராமணனுக்குப்பிறந்தவன். |
பெரு-பெருகு-வ. பிருஹ். பெருங்கதை,பெருவுடையார் என்னும் தென்சொற்களின்மொழிபெயர்ப்பே, ப்ருஹத் கதா, ப்ருஹதீஸ்வரஎன்னும் வடசொற்கள். பெருமன்-வ. ப்ரஹ்மன்-பிரமன்.பிரமனுக் குரியது பிராமணம். பிராமணத்திற்குரியவன் பிராமணன். பிராமணர் தென்னாட்டுத் தமிழநாகரிகச் சிறப்பைப்பற்றிக் கேள்விப்பட்டு,இங்கும் தம் மேம்பாட்டை நிறுவுமாறு, நைமிசஅடவியில் அடிக்கடி மாநாடு கூடிச் சூழ்ந்ததாகத்தெரிகின்றது. ஒரு நிமை (நொடி) நேரத்தில் ஒருபெரும்படை கொல்லப்பட்ட இடம், நைமிசம் என்றுபெயர் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது.இமை-நிமை - வ. நிமி - நிமிஷ - நைமிஷ - நைமிச. நைமிசாடவி மாநாட்டுத்தீர்மானத்தின்படி, அகத்தியர் தென்னாடுநோக்கிப் புறப்பட்டார். அவர் காசியினின்றுவிந்தமலை யடைந்து அங்கிருந்து தண்டக அடவி வந்துதங்கி, அதன்பின் காஞ்சி யடைந்து, பின் காவிரிதோன்றும் சையம் என்னும் குடகுமலை சென்று, குடமலைவழியாகப் பொதியமலை போய்ச் சேர்ந்ததாகக்காஞ்சிப் புராணங் கூறுகின்றது. விந்தமலை கடக்க முடியாத தென்றுஆரியர் நெடுநாளாகக் கருதிக்கொண்டிருந்ததனால்,அகத்தியர் அதைக் கடந்து வந்தபோது அதன்செருக்கை யடக்கினதாகக் கூறினர். "யோகமுறு பேருயிர்கள் தாமுலைவு றாமல் ஏகுநெறி யாதெனமி தித்தடியி னேறி மேகநெடு மாலைதவழ் விந்தமெனும் விண்டோய் நாகமது நாகமுற நாகமென நின்றான்" | (ஆரணி. அகத்.39) |
என்பது கம்பராமாயணம். இராமன் தன்மனைவியொடும்தம்பியொடும் காட்டிற்கு வந்து தண்டக அடவியில்அகத்தியரைக் கண்டபோது, அம் முனிவர் இராமனைஅங்கேயே யிருந்து அரக்கரைக் கொல்லச் சொன்னாரென்றும்; அதற்கு இராமன் தான் அதற்காகவேவந்திருப்பதால், இன்னும் சற்றுத் தெற்கேதள்ளிப் போய் அரக்கர் வரும் வழியிற்காத்திருக்க வேண்டுமென்று சொன்னானென்றும்;அதற்கு அகத்தியர் இசைந்து, வில்லும் வாளும்அம்பும் புட்டிலும் கொடுத்
|