பக்கம் எண் :

தமிழர் வரலாறு-221

துப் பஞ்சவடியிற்போயிருக்கச் சொன்னாரென்றும் கம்பராமா யணங்கூறுகின்றது.

"விழுமியது சொற்றனையிவ் வில்லிதிவண்மேனாள்
முழுமுதல்வன் வைத்துளது மூவுலகும் யானும்
வழிபடவி ருப்பதிது தன்னைவடி வாளிக்
குழுவழுவில் புட்டிலொடு கோடியென நல்கி.

"இப்புவன முற்றுமொரு தட்டினிடை யிட்டால்
ஒப்புவர விற்றெனவு ரைப்பரிய வாளும்
வெப்புருவு பெற்றவரன் மேருவரை வில்லா
முப்புரமெ ரித்ததனி மொய்க்கணையு நல்கா."

(கம்பரா. அகத். 55,56)

என்பன அகத்தியர் இராமனுக்குப்படைக்கலம் வழங்கியது பற்றியன.

அகத்தியர் காசியிற் புறப்படு முன்னரேசிவபெருமானிடந் தமிழ் கற்றார் என்னுங் கதையும்,அகத்தியருக்கு அடுத்தே ஒரு பிராமணக் கூட்டம் வந்துதண்டக அடவியில் தங்கியிருந்ததும், அகத்தியர்இராமனுக்கு வில்லும் வாளும் வழங்கியதும்நோக்குமிடத்து, ஓர் ஆரியக் குடியேற்றக்கூட்டத்தின் தலைவராகவே அகத்தியர் திட்டமிட்டுவந்ததாகத் தெரிகின்றது.

அவர் தமிழகம் வந்து முத்தமிழுங் கற்று,ஒரு முத்தமிழிலக்கணம் இயற்றி, அதற்கு அகத்தியம்எனப் பெயரிட்டார். தமிழ முனிவர்போற்பொதியமலையில் தங்கி, ஆரியரும் தமிழருமானமாணவர் பலருக்குத் தமிழ் கற்பித்தார். ஆரியமாணவருள் ஒருவனான இந்திரன் என்பவன், இயற்றமிழிலக்கணத்தைத் தழுவி, பொருள் ஆரியத்திற்கேற்காமை யால் அதை நீக்கி, எழுத்தும்சொல்லும்பற்றி முதல் ஆரிய இலக்கண நூலை இயற்றி,அதற்கு ஐந்திரம் எனப் பெயரிட்டான். அதைப் பின்பற்றியே பிராதிசாக்கியங்கள் என்னும் ஆரியவேதச் சிற்றிலக்கணங் கள் தோன்றியிருத்தல்வேண்டும். இந்திரன் தமிழெழுத்தினின்று கிரந்தஎழுத்தை வகுத்தே நூலியற்றி யிருத்தல் வேண்டும்.

கான்சுத்தாந்தியசு பெசுக்கி (ConstantiusBeschi) என்னும் வீரமா முனிவர்,இத்தாலியா நாட்டினின்று 18ஆம் நூற்றாண்டில்இங்குவந்து, வேம்பாய் (Bombay)மண்டலத்தைச் சேர்ந்த கோவாவில் தமிழ்கற்று,தமிழ்நாட்டிற் பொதுமக்களொடு தொடர்புகொண்டுசமயப்பணி யாற்றி, 3615 மண்டிலம் (விருத்தம்)கொண்ட தேம்பாவணி என்னும் சிறந்தபாவியத்தையும்,370 நூற்பாக் கொண்ட ஐந்திலக்கணத்தொன்னூல் விளக்கம் என்னும் அரிய இலக்கணநூலையும், இயற்றியதை நோக்கின், அகத்தியர்முத்தமிழி லக்கணம் இயற்றியது அத்துணை வியப்பிற்கிடமானதன்று.

அகத்தியம் ஆரியரால் அழியுண்டபின்,பிற நூல்களிலுள்ள அகத்திய மேற்கோள்களெல்லாம்தொகுக்கப்பட்டன. முதற்கண்